விளையாட்டு

"நீங்க எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் இதை செய்யக்கூடாது" -இந்திய அணியின் மூத்த வீரர்களை விளாசிய கவாஸ்கர் !

பயிற்சியில் முன்னணி வீரர்கள் பங்கேற்காததை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"நீங்க எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் இதை செய்யக்கூடாது" -இந்திய அணியின் மூத்த வீரர்களை விளாசிய கவாஸ்கர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டிக்கு முன்பாக மெல்போர்னில் நடக்கவிருந்த பயிற்சியில் (optional) பல முன்னணி வீரர்கள் பங்கேற்காததை கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சஹால், கேஎல் ராகுல் ஆகியோர் வலைப்பயிற்சியைத் தவறவிட்டிருந்த நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஆல்ரவுண்டர்கள் அக்‌ஷர் படேல், தீபக் ஹூடா, ரிசர்வ் வீரர்களான ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

"இது மற்றவர்களுக்கு என்ன மாதிரியான செய்தியைத் தெரிவிக்கிறது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தொடரின் தொடக்கத்தில் நீங்கள் ஆடவேண்டிய ஒரு பயிற்சிப் போட்டி மழையால் ரத்தாகிவிட்டது, மெல்போர்ன் வந்ததும் ஒருநாள் விடுப்பு இருந்தது, அதற்கு அடுத்த நாள் பயிற்சியில் பங்கேற்காமல் இருக்கிறீர்கள்... இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

"நீங்க எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் இதை செய்யக்கூடாது" -இந்திய அணியின் மூத்த வீரர்களை விளாசிய கவாஸ்கர் !

பயிற்சியில் பங்கெடுக்காதவர்கள் மிகப் பெரிய மேட்ச் வின்னர்களாக விளங்கலாம். ஆனால் ஒரு டீமாக உங்களுக்கு நல்ல ரிதம் செட் ஆகவேண்டும். வெற்றிக்கான வேட்கையை நீங்கள் காணவேண்டும். நீங்கள் பயிற்சிக்கு செல்லாமல் இருக்கக்கூடிய ஆப்ஷனை கேப்டனோ, பயிற்சியாளரோ தான் கொடுக்கவேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு போட்டியில் சதம் அடிக்கிறீர்கள். அப்போது ஒரு சிறிய காயம் ஏற்படுகிறது. அப்போது 'பரவாயில்லை நீங்கள் பயிற்சிக்கு வரவேண்டாம்' என்று கூறலாம். அதேபோல் 20 - 30 ஓவர்கள் பந்துவீசிய ஒரு பௌலருக்கு சோர்வாக இருக்கும்போது அந்த பௌலருக்கு கேப்டனோ பயிற்சியாளரோ விடுப்பு கொடுக்கலாம்.

அந்த முடிவை வீரரிடம் விடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியொரு ஆப்ஷனே இருக்கக் கூடாது. எப்போதும் பயிற்சியாளரும், கேப்டனும் மட்டுமே அந்த முடிவை எடுக்கவேண்டும். இது இந்திய கிரிக்கெட்டை எத்தனை முறை பாதித்திருக்கிறது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.

"நீங்க எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் இதை செய்யக்கூடாது" -இந்திய அணியின் மூத்த வீரர்களை விளாசிய கவாஸ்கர் !

"அதுவும் குறிப்பாக ஒரு தொடரின் ஆரம்பத்தில் இப்படி நடப்பது சரி அல்ல. தொடரின் பாதியில் என்றால் கூடப் பரவாயில்லை. அப்போது அணி ஓரளவு நல்ல நிலையில் இருக்கும். எல்லோரும் நன்றாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது எல்லோருக்கும் ஒரு பிரேக் கொடுக்கலாம். ஒரு படத்துக்குப் போயோ அல்லது வெளியே எங்காவதோ சென்று கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கலாம். ஆனால் ஒரு தொடரின் ஆரம்பத்திலேயே விருப்ப பயிற்சி என்பது ஏற்கக் கூடியதே அல்ல.

ஒருவேளை போட்டிக்கு முந்தைய நாள் மாலை அனைவரும் பயிற்சிக்கு வரலாம். ஆனால் அது பிரச்சனை இல்லை. நீங்கள் அனைவரும் வெற்றிக்குப் போராடத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தவேண்டும். நாளை ஒருவேளை மழை பெய்தால் என்ன ஆகும். பயிற்சி தடைபடுவிடும் அல்லவா" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் கவாஸ்கர்.

banner

Related Stories

Related Stories