விளையாட்டு

T20WorldCup - “எனக்கு நம்பிக்கை இல்லை” - ரோஹித் ஷர்மாவை எச்சரிக்கும் கம்பீர் : என்ன சொல்கிறார் தெரியுமா?

ஹர்திக் பாண்டியாவை இறக்கி ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால், இந்திய அணி அக்‌ஷர் படேலை களமிறக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

T20WorldCup - “எனக்கு நம்பிக்கை இல்லை” - ரோஹித் ஷர்மாவை எச்சரிக்கும் கம்பீர் : என்ன சொல்கிறார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கடந்த வாரம் கூறியிருந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. கடைசி நேரத்தில் போட்டிக்கு தயாராவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் அவர். இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியின்போது இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இந்த விவாதம் பெரும்பாலும் இரண்டு பொசிஷன்களைச் சுற்றித்தான் நடக்கிறது - இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர். இந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார்.

T20WorldCup - “எனக்கு நம்பிக்கை இல்லை” - ரோஹித் ஷர்மாவை எச்சரிக்கும் கம்பீர் : என்ன சொல்கிறார் தெரியுமா?

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இன்னும் 2 நாள்கள் இருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தார் கம்பீர். அப்போது, தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் தான் இந்தியாவின் பிளேயிங் லெவனில் இருக்க சரியான ஆள் என்று சொல்லியிருக்கிறார் அவர்.

தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக மட்டுமே ஆடும் நிலையில், எந்த இடத்திலும் ஆடக் கூடிய பண்ட்டை அணியில் எடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் கம்பீர். தினேஷ் கார்த்திக்கால் டெத் ஓவர்களில் மட்டும் தான் ஆட முடியும் என்பதால், இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்கும்பட்சத்தில் அவர் இருப்பது அணிக்குப் பாதகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

T20WorldCup - “எனக்கு நம்பிக்கை இல்லை” - ரோஹித் ஷர்மாவை எச்சரிக்கும் கம்பீர் : என்ன சொல்கிறார் தெரியுமா?

"என்னுடைய பிளேயிங் லெவனில் ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட், ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியா, ஏழாவது வீரராக அக்‌ஷர் படேல் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் பயிற்சி போட்டியில் நடந்தவற்றை வைத்துப் பார்த்தால் தினேஷ் கார்த்திக் தான் விளையாடுவார் போலத் தெரிகிறது. ஆனால் ஒரு விக்கெட் கீப்பரை வெறும் 10 பந்துகள் விளையாடுவதற்காக மட்டும் எடுக்கக் கூடாது.

ஐந்தாவது அல்லது ஆறாவது வீரராக விளையாடக்கூடிய ஒரு வீரரை அணி தேர்வு செய்யவேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தவே இல்லை. அவர் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்வார் என்பதை அவரும், அணி நிர்வாகமும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அது ஆபத்தாக முடியலாம். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்துவிட்டால் அது அணிக்குப் பிரச்சனையாகிவிடும்.

T20WorldCup - “எனக்கு நம்பிக்கை இல்லை” - ரோஹித் ஷர்மாவை எச்சரிக்கும் கம்பீர் : என்ன சொல்கிறார் தெரியுமா?

ஹர்திக் பாண்டியாவை இறக்கி ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால், இந்திய அணி அக்‌ஷர் படேலை களமிறக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அதனால் தான் என் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் இருப்பார்" என்று கூறியிருக்கிறார் கம்பீர். அதேபோல், காயத்தால் அணியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்குப் பதிலாக இடம்பெற்றிருக்கும் முகமது ஷமி இந்தியாவின் முதல் வேகப்பந்துவீச்சாளராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடவேண்டும். புவனேஷ்வர் குமார், ஆர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு முன்பாக முகமது ஷமி முதல் சாய்ஸாக இருக்கவேண்டும். ஹர்திக் பாண்டியா நான்காவது வேகப்பந்துவீச்சாளராகவும், ஆறாவது பௌலிங் ஆப்ஷனாகவும் இருக்கவேண்டும்.

ஷமி மிகவும் திறமையான நியூ பால் பௌலர். பழைய பந்தில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது அதையும் நாம் பார்த்தோம். அதனால் அவர் தான் முதல். புவனேஷ்வர், ஆர்ஷ்தீப் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படவேண்டும். டெத் ஓவர்களில் பந்துவீசிய அனுபவம் ஓரளவு இருப்பதால் ஹர்ஷல் படேல் பிளேயிங் லெவனில் இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் கௌதம் கம்பீர்.

banner

Related Stories

Related Stories