விளையாட்டு

"இந்த முறை கோப்பை நமக்குதான், அதற்கு நிறைய திட்டம் தீட்டியுள்ளோம்" - ரோஹித் சர்மா உறுதி !

இந்திய அணி நீண்ட காலமாக உலக கோப்பையை வெல்லவில்லை. இம்முறை அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து களமிறங்க உள்ளோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்த முறை கோப்பை நமக்குதான், அதற்கு நிறைய திட்டம் தீட்டியுள்ளோம்" - ரோஹித் சர்மா உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதல் தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இதன் காரணமாக இந்த தொடர் எல்லா அணிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதையே நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானையும் வீழ்த்தியது.

"இந்த முறை கோப்பை நமக்குதான், அதற்கு நிறைய திட்டம் தீட்டியுள்ளோம்" - ரோஹித் சர்மா உறுதி !

தற்போதைய நிலையில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியை வெல்ல இந்திய அணி பல்வேறு திட்டங்களை வகித்து வருகிறது. இந்திய அணி கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது.அதன்பின்னர் இந்திய அணி கோப்பையை வென்றதே இல்லை.

"இந்த முறை கோப்பை நமக்குதான், அதற்கு நிறைய திட்டம் தீட்டியுள்ளோம்" - ரோஹித் சர்மா உறுதி !

இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " இந்திய அணி நீண்ட காலமாக உலக கோப்பையை வெல்லவில்லை. இம்முறை அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து களமிறங்க உள்ளோம். டி20 உலக கோப்பைக்கு முன்பு இரண்டு தொடர்களை வென்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளோம்.

இந்திய மைதானத்தில் விளையாடியதற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று தெரியும். அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்ய வேண்டும்? எதிரணியை வீழ்த்துவதற்கு என்னென்ன நுட்பங்களை பின்பற்ற வேண்டும்? என்று தொடர்ந்து திட்டமிட்டு அதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories