விளையாட்டு

"உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது" -மனம் திறந்த ரோஹித் சர்மா !

இந்த உலகக்கோப்பை போட்டி முக்கியமானது. ஆனால் அதை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

"உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது" -மனம் திறந்த ரோஹித் சர்மா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி பலரால் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கவுள்ளது. ந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது. மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது" -மனம் திறந்த ரோஹித் சர்மா !

இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.இந்திய அணியில் ஜடேஜா,பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இந்தியா இந்த தொடரை எப்படி அணுகப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் முகமது சமி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடம் பும்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

"உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது" -மனம் திறந்த ரோஹித் சர்மா !

இதற்கு பதில் அளித்த அவர், ''இந்த உலகக்கோப்பை போட்டி முக்கியமானது. ஆனால் அதை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது. பும்ராவின் காயம் குறித்து நிறைய மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்தோம். ஆனால் யாரும் திருப்திகரமான பதிலை கொடுக்கவில்லை. அவருக்கு தற்போது 27-28 வயதுஆகிறது. அவர் இன்னும் நிறைய கிரிக்கெட்டில் விளையாட வேண்டி உள்ளது.

காயத்துடன் அவரை உலக கோப்பை போட்டியில் விளையாட வைப்பது மிகவும் 'ரிஸ்க்' ஆகும். நாங்கள் பேசிய அனைத்து டாக்டர்களும் இதையே சொன்னார்கள். அவருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. பும்ரா இந்திய அணிக்காக மேலும் பல போட்டிகளில் விளையாடி வெற்றி தேடித்தருவார். ஆனால் அவர் அணியில் இல்லாதது இழப்பு தான்.

banner

Related Stories

Related Stories