விளையாட்டு

உலக கோப்பையில் பும்ரா ? - செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை கசியவிட்ட ராகுல் டிராவிட் !

உலக கோப்பை போட்டியில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.

உலக கோப்பையில் பும்ரா ? - செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை கசியவிட்ட ராகுல் டிராவிட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.

உலக கோப்பையில் பும்ரா ? - செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை கசியவிட்ட ராகுல் டிராவிட் !

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான தொடரில் இந்திய அணி 2-1 என கைப்பற்றினாலும், முதல் போட்டியில் 200 ரன்களை அடித்தும் ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி பெற்றது இந்திய அணியின் பந்து வீச்சைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் பும்ரா விளையாடவில்லை.

பயிற்சியின் போது பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் 6 மாதங்கள் வரை விளையாட முடியாது என்ற தகவலும் வெளியாக உள்ளது.அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகல் அவர் அணியில் இடம் பெறுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பையில் பும்ரா ? - செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை கசியவிட்ட ராகுல் டிராவிட் !

அதைத் தொடேன்ற்து பும்ரா உலககோப்பையில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக BCCI தலைவர் கங்குலி கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்து பேசிய அவர், "பும்ரா இன்னும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகவில்லை. அவர் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்த நிலையில்,இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிராவிட் 'மருத்துவ அறிக்கைக்குள் நான் ஆழமாக செல்லவில்லை. பும்ரா காயம் விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அவரது உடல் தகுதி நிலை குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக காத்து இருக்கிறோம். தற்போது அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி இருக்கிறார். உலக கோப்பை போட்டியில் இருந்து இன்னும் விலகவில்லை. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் நாங்கள் எதுவும் சொல்ல முடியும். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்' என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories