இந்தியா

1 கோடி இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்.. WHATSAPP நிறுவனத்தின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?

1 கோடி இந்தியர்களின் கணக்குகளை WHATSAPP நிறுவனம் முடக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 கோடி இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்.. WHATSAPP நிறுவனத்தின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே நேரம் போலி கணக்குகள், தவறான செய்திகளை பரப்புதல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறது.

இதன் காரணமாக வாட்ஸ்அப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்திய அந்நிறுவனம் பல்வேறு கணக்குகளையும் முடக்கி வருகிறது. அரசின் புதிய விதிகள் காரணமாகவும் இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

1 கோடி இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்.. WHATSAPP நிறுவனத்தின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன ?

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான கணக்குகள் அதன் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வராமலேயே தடை செய்யப்பட்டதாக செய்தி தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்து.

வாட்ஸ்அப் அதன் குறைதீர்க்கும் சேனல் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 1.8 மில்லியன் கணக்குகளும், ஏப்ரலில் 1.6 மில்லியன் கணக்குகளும்,மே மாதத்தில் இதுபோன்ற 1.9 மில்லியன் கணக்குகளும் , ஜூன் மாதத்தில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories