விளையாட்டு

"போட்டிக்கு முன்னர் டாக்டரிடம் கதறி அழுதேன்"- சூர்யகுமார் யாதவ் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!

இந்திய ஜெர்சியில் நான் ஒருமுறை மைதானத்திற்கு வந்தவுடன், எனக்கு வித்தியாசமான உணர்ச்சி இருக்கிறது என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

"போட்டிக்கு முன்னர் டாக்டரிடம் கதறி அழுதேன்"- சூர்யகுமார் யாதவ் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மாவின் அணி மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் இருந்தது. ஓப்பனர்கள் ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்ட நிலையில் ஒரு மிகச் சிறப்பான இன்னிங்ஸை விளையாடி 'சேஸிங் கிங்' என்ற தன்னுடைய பெயரை நிரூபித்தார் விரார் கோலி. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கினார் விராட். அவர்கள் இருவருமே அரைசதம் கடந்து அசத்த, மூன்று போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச டி20 தொடரை 2-1 என வென்றது இந்தியா.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 187 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. அந்த கடினமான இலக்கை துறத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. இந்திய அணியின் ஓப்பனர்கள் கேஎல் ராகுல், கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருமே நான்கு ஓவர்களுக்குள்ளாகவே வெளியேறினர்.

"போட்டிக்கு முன்னர் டாக்டரிடம் கதறி அழுதேன்"- சூர்யகுமார் யாதவ் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!

ஆனால் அதன் பிறகு கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 62 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் அக்சர் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் கலந்துரையாடினர். அப்போது அக்சர் பட்டேல் சூரியகுமார் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூரியகுமார், "இந்திய ஜெர்சியில் நான் ஒருமுறை மைதானத்திற்கு வந்தவுடன், எனக்கு வித்தியாசமான உணர்ச்சி இருக்கிறது. நேற்றிரவு போட்டிக்கு முன் எனக்கு வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது நான் எனது மருத்துவர் மற்றும் பிசியோவிடம் சொன்னேன்.

"போட்டிக்கு முன்னர் டாக்டரிடம் கதறி அழுதேன்"- சூர்யகுமார் யாதவ் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தால் நான் எப்படி நடந்துகொள்வேன்? என்னால் உடம்பு சரியில்லாமல் இருக்க முடியாது. அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு மருந்து அல்லது ஊசி போடுங்கள், ஆனால் மாலை போட்டிக்கு என்னை தயார்படுத்துங்கள்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories