விளையாட்டு

"கங்குலி போன்ற ஒரு நல்ல மனிதனை தப்பா நினைத்து விட்டேனே! "-மனம் வருந்திய பாக்.முன்னாள் ஜாம்பவான் !

கங்குலி போன்ற ஒரு நல்ல மனிதரைப் பற்றி மிகவும் தவறாக கருதியிருந்ததை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது என பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சக்லைன் முஸ்தாக் கூறியுள்ளார்.

"கங்குலி போன்ற ஒரு நல்ல மனிதனை தப்பா நினைத்து விட்டேனே! "-மனம் வருந்திய பாக்.முன்னாள் ஜாம்பவான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான சக்லைன் முஸ்தாக், இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பற்றி தன் தவறாக நினைத்ததாகக் கூறியிருக்கிறார். கங்குலி பற்றி தான் தவறாக நினைத்திருந்ததாகவும், ஒரு போட்டியில் அது தவறு என்பதை கங்குலி நிரூபித்ததாகவும் கூறியிருக்கிறார் முஸ்தாக். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் 2003-04 தொடரின்போது நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியது:

"ஒரு சில வீரர்கள் இருப்பார்கள். அவர்களிடம் பேசவோ உரையாடவோ நமக்குத் தோன்றாது. நான் விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், சௌரவ் கங்குலி மீது தொடக்கத்தில் எனக்கு அப்படியொரு உணர்வு இருந்தது. அவர் இந்திய அணியின் கேப்டன், ஒரு ஜாம்பவான் என்பதிலெல்லாம் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் நாங்கள் பார்க்கும்போதெல்லாம், 'ஹாய்', 'ஹலோ' மட்டும்தான். அதற்கு மேல் எதுவும் பேசியதில்லை. அவர் மிகவும் தற்பெருமை கொண்டவர் என்று நான் நினைத்திருந்தேன்.

"கங்குலி போன்ற ஒரு நல்ல மனிதனை தப்பா நினைத்து விட்டேனே! "-மனம் வருந்திய பாக்.முன்னாள் ஜாம்பவான் !

2003-04 காலகட்டத்தில் எனக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில காலம் கழித்து இந்தியா vs பாகிஸ்தான் தொடர் தொடங்கியது. அந்தத் தொடரில் சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் எல்லோருமே பங்கேற்றிருந்தார்கள். சச்சினுக்குக் கூட கொஞ்சம் முன்பு தான் முழங்கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அப்போது இந்திய அணிக்கு எதிராக ஒரு பயிற்சி போட்டியில் ஆடவேண்டியிருந்தது. நான் காயத்தில் இருந்து அப்போதுதான் தேறிக்கொண்டிருந்தேன். சசெக்ஸ் அணிக்காக கவுன்டி போட்டியிலும் விளையாடவேண்டியிருந்தது.

அப்போது நாங்கள் இருந்த மைதானத்தில் இருந்த டிரஸ்ஸிங் ரூம் ஒட்டியே இருந்தது. இரண்டு அறைகளுக்கும் இடையே ஒரு சிறிய சுவர்தான் இருந்தது. குதித்தோ, இல்லை பின் பக்கமாகவோ எளிதில் உள்ளே வர முடியும். நான் சொல்வதை நம்புங்கள், கங்குலி இரண்டு கோப்பை காபியோடு உள்ளே நுழைந்தார். இரண்டு கோப்பைகளோடு என்னைப் பார்ப்பதற்காக அவர் குதித்து அறைக்குள் வந்தார். அதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்கிறார் என்று சில நேரம் எனக்குப் புரியவில்லை.

"கங்குலி போன்ற ஒரு நல்ல மனிதனை தப்பா நினைத்து விட்டேனே! "-மனம் வருந்திய பாக்.முன்னாள் ஜாம்பவான் !

அது அவர் மீதான என்னுடைய பார்வையை முற்றிலும் மாற்றியது. ஒரு நல்ல மனிதரைப் பற்றி மிகவும் தவறாக கருதியிருந்ததை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. அதற்கு முன்பு நான் அவரோடு உரையாடியதே இல்லை. அவர் ஈகோ நிறைந்த மிகவும் விநோதமான மனிதன் என்றே நான் நினைத்திருந்தேன்.

எங்கள் உரையாடலின்போது, அவர் என்னுடைய முழங்கால் பற்றிக் கேட்டார். நிறைய அறிவுரைகள் கூறினார். என்னை நன்கு உற்சாகப்படுத்தினார். கிரிக்கெட் பற்றி, வாழ்க்கை பற்றி நிறைய பேசினோம். சில வேடிக்கையான விஷயங்களைப் பற்றியும் பேசினோம். அவர் எங்கள் அறையில் இருந்து வெளியேறியபோது அவரிடம், 'என்னை மன்னித்துவிடுங்கள் கங்குலி. உங்களைப் பற்றி நான் மிகவும் தவறாக நினைத்திருந்தேன். ஆனால் இந்த சந்திப்பு அதை மாற்றிவிட்டது. ஒரு மனிதராக நான் உங்களின் ரசிகனாகிவிட்டேன்' என்று கூறினேன். ஆம், ஒரு வீரராக அவர் செய்த விஷயங்களை நிறைய சொல்லலாம். ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகு ஒரு மனிதராகவும் என் இதயத்தை அவர் வென்றார்"இவ்வாறு தன் பேட்டியில் கூறினார் சக்லைன் முஸ்தாக்.

banner

Related Stories

Related Stories