விளையாட்டு

“ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி” : ஓப்பனிங்கில் விளையாடுவது யார் ? - முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?

நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய அணிக்கு ஆசுவாசமாக அமைந்திருக்கிறது.

“ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி” : ஓப்பனிங்கில் விளையாடுவது யார் ? - முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருப்பது இந்திய அணிக்கு ஆசுவாசமாக அமைந்திருக்கிறது. அதுவும் அவர் மிகவும் சரியான நேரத்தில் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில் கோலி ரன் குவிப்பது இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.

ஆறு வார இடைவெளிக்குப் பிறகு ஆசிய கோப்பை தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குத் திருபினார் விராட். மிகச் சிறப்பாக விளையாடிய அவர், 5 இன்னிங்ஸ்களில் 278 ரன்கள் குவித்தார். சராசரி 92. இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார் கோலி. 3 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் சதம் அடிக்க முடியாமல் தடுமாறியவர், இந்தத் தொடரில் அதையும் நிறைவு செய்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய கடைசி போட்டியில், ரோஹித் ஷர்மா விளையாடாததால் கேஎல் ராகுல் உடன் ஓப்பனராக களமிறங்கினார். 61 பந்துகளில் 122 ரன்கள் குவித்து சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

“ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி” : ஓப்பனிங்கில் விளையாடுவது யார் ? - முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். அவருடைய இந்த அட்டகாசமான ஆட்டம் இப்போது புதிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. அந்த ஆட்டத்துக்குப் பிறகு பலரும் கோலி ஓப்பனிங்கில் விளையாடுவது தான் இந்திய அணிக்கு சரியானதாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் இந்த கருத்துக்கு பல முன்னாள் வீரர்கள் பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்போது இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். "மீண்டும் விராட் கோலி ஓப்பனராக ஆடவேண்டும் என்ற முட்டாள் தனமான கருத்தைத் தொடங்கவேண்டும். ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் அணியில் இருக்கும்போது அவர் நிச்சயமாக ஓப்பனராக களமிறங்க முடியாது.

இதை நான் நேரலையில் கூட சொன்னேன். இது பற்றி விவாதிக்கவேண்டிய அவசியமே இல்லை. மூன்றாவது வீரராக யார் விளையாடவேண்டும் என்பதில் நான் எப்போதுமே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பேன். ஒருவேளை ஓப்பனர்கள் 10 ஓவர்களுக்கு மேல் விளையாடினால் சூர்யகுமார் யாதவை மூன்றாவது வீரராகக் களமிறக்குவேன். விரைவிலேயே விக்கெட்டுகள் வீழ்ந்தால், கோலி என்னுடைய சாய்ஸாக இருப்பார்" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் கம்பீர்.

“ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி” : ஓப்பனிங்கில் விளையாடுவது யார் ? - முன்னாள் வீரர்கள் கருத்து என்ன?

விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, டி20 போட்டிகளில் கேப்டனாக களமிறங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த சர்வதேச டி20 தொடரில் அவர் ஓப்பனராக விளையாடினார். அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் அவர் ஓப்பனராக விளையாடினார்.

ஆனால் அவர் ரோஹித் ஷர்மா அல்லது கே.எல்.ராகுலுக்கு பதில் ஓப்பனராக ஆடுவது இயலாத காரியம். அதேபோல் மூன்றாவது வீரராக விளையாட கோலி மோசமான சாய்ஸ் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் தன் கிரிக்கெட் கரியரில் அவர் அந்த பொசிஷனில் தான் நிறைய சாதித்திருக்கிறார். கம்பீர் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய முன்னாள் ஓப்பனர் மாத்யூ ஹெய்டன் கூட கோலி மூன்றாவது வீரராக விளையாடுவது தான் இந்தியாவுக்கு மிகவும் நல்லது என்று கூறினார்.

"விராட் கோலி மூன்றாவது வீரராக விளையாடுவதை நான் விரும்புவேன். அவர் ஸ்டிரைக்கை மிகச் சிறப்பாக கையாளக் கூடியவர். அவர் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. அவரால் இன்னிங்ஸை சிறப்பாக கன்ட்ரோல் செய்ய முடியவேண்டும். அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுகிறார் தான். ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக விளையாடுபவர். இந்தியாவின் டாப் 4 பொசிஷன்கள் முடிவாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என அதே நிகழ்ச்சியில் கூறினார் ஹெய்டன்.

banner

Related Stories

Related Stories