விளையாட்டு

"அவர் நிச்சயம் ஓய்வு பெறவேண்டும்" - விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் .!

ஷஹீத் அப்ரிடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தரும் கோலி ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.

"அவர் நிச்சயம் ஓய்வு பெறவேண்டும்" - விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் .!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.

"அவர் நிச்சயம் ஓய்வு பெறவேண்டும்" - விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் .!

விராட் கோலியின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தருணத்தில விராட் கோலி பார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷஹீத் அப்ரிடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

"அவர் நிச்சயம் ஓய்வு பெறவேண்டும்" - விராட் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் .!

இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அப்ரிடிக்கு கண்டனம் தெரிவித்துவந்தனர். கோலி ஓய்வு பெற்றால் பாகிஸ்தானுக்கு கொண்டாட்டம்தான் என்ற ரீதியில் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ஷஹீத் அப்ரிடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தரும் கோலி ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறலாம். மற்ற வடிவங்களில் தனது நீண்ட ஆயுளை நீட்டிக்க அவர் அதைச் செய்யலாம். நான் அவராக இருந்தால் பெரிய இலக்கை நோக்கி அந்த முடிவை தான் எடுத்திருப்பேன்' என்று கூறியுள்ளார். இதனால் தற்போது இந்திய ரசிகர்கள் சோயிப் அக்தரையும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories