அரசியல்

"என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண்" - கைது செய்யவந்த பெண் காவல் அதிகாரியை அவமானப்படுத்திய பா.ஜ.க தலைவர் !

கைது செய்யவந்த பெண் அதிகாரியிடம் “என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண், நான் ஆண்” என பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண்" - கைது செய்யவந்த பெண் காவல் அதிகாரியை அவமானப்படுத்திய பா.ஜ.க தலைவர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மம்தா பானர்ஜீ தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறு வருகிறது. இங்கு எதிர்க்கட்சியாக பா.ஜ.க இருந்து வரும் நிலையில், சட்டமன்ற எதிக்கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாக கூறி எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் தலைமைச்செயலகம் நோக்கி பேரணி சென்றனர். அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்தனர்.

"என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண்" - கைது செய்யவந்த பெண் காவல் அதிகாரியை அவமானப்படுத்திய பா.ஜ.க தலைவர் !

அப்போது சுவேந்து அதிகாரியை கைது செய்ய பெண் அதிகாரி ஒருவர் வந்துள்ளார். அப்போது இதனை எதிர்த்த சுவேந்து அதிகாரி “என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண், நான் ஆண்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். மேலும், தன்னிடம் பேசுவதற்கு ஆண் போலீஸ் அதிகாரிகளை மட்டுமே அழைக்க வேண்டும் என்று அவர் கூறியதாகவும் தகவல் வெளியானது.

சுவேந்து அதிகாரியின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக விடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாஜக தலைவரின் இந்த பிற்போக்கு சிந்தனையை விமர்சித்து வருகின்றனர். பெண் போலீஸை இழிவாக நடத்திய சுவேந்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories