விளையாட்டு

“ரவி சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட் - கோலிக்கு பதில் ரோஹித் ஷர்மா” : பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

த ஆசிய கோப்பை தொடரில் அவர் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கங்குலி.

“ரவி சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட் - கோலிக்கு பதில் ரோஹித் ஷர்மா” : பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒரு காலகட்டத்தில் உச்சகட்ட ஃபார்மில் இருந்து கிரிக்கெட் உலகையே கட்டி ஆண்ட விராட் கோலி இப்போது ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த சில தொடர்களாக ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கோலி மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதன்பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திலும், அடுத்த நடக்கவிருக்கும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை.

இங்கிலாந்தில் விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து வெறும் 33 ரன்களே எடுத்தார். டெஸ்ட் போட்டிகளிலும் அதுவே தொடர்ந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 31 ரன்கள் எடுத்த அவர், விளையாடிய இரண்டு சர்வதேச டி20 போட்டிகளிலும் 1, 11 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

“ரவி சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட் - கோலிக்கு பதில் ரோஹித் ஷர்மா” : பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

தற்போது இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அதற்கு 33 வயதான விராட் கோலியும் மிகவும் தீவிரமாக தயாராகிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் கோலி மீது தனக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகவும், இந்தத் தொடரில் கோலி தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டெடுப்பார் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

"அவர் தன் போக்கில் பயிற்சி செய்யட்டும், போட்டிகளில் விளையாடட்டும். அவர் மிகப்பெரிய வீரர், எண்ணற்ற ரன்கள் குவித்திருக்கிறார். அவர் மீண்டு வருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் சதம் அடிக்கத் தடுமாறுகிறார் அவ்வளவுதான். இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கங்குலி.

கடந்த சில ஆண்டுகளாக கோலி பெரிய ஸ்கோர் எடுக்கத் தடுமாறுகிறார். சர்வதேச அரங்கில் அவர் சதமடித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2019ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியில் அவர் கடைசியாக சதம் அடித்திருந்தார். அதன்பிறகு அவர் ஒருசில அரை சதங்கள் அடித்திருந்தாலும், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த 71வது சதம் வரவேயில்லை.

“ரவி சாஸ்திரிக்கு பதில் ராகுல் டிராவிட் - கோலிக்கு பதில் ரோஹித் ஷர்மா” : பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

கோலியின் பேட்டிங் ஃபார்ம் தவிர்த்து, பாகிஸ்தானுக்கு எதிராக அவர் தீர்க்கவேண்டிய இன்னொரு கணக்கும் இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா அடைந்த ஒரே தோல்வி. தன்னுடைய தலைமையில் அந்த அவப்பெயரை சந்தித்த விராட் கோலி, நிச்சயம் அதற்குப் பழிதீர்க்க காத்திருப்பார்.

இருந்தாலும், இந்திய அணியில் அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி இப்போது அந்த இடத்தில் இல்லை. அவருக்குப் பதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இப்போது பயிற்சியாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கோலியும் இப்போது கேப்டன் இல்லை. மூன்று ஃபார்மட்களிலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவே இருக்கிறார். நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இந்த ஆசிய கோப்பை தொடரை வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories