விளையாட்டு

ஐந்தே பந்துகள்தான்.. தோனி,கோலியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரோஹித் ஷர்மா ! என்ன சாதனை ?

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த கேப்டன் எந்த சாதனையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

ஐந்தே பந்துகள்தான்.. தோனி,கோலியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரோஹித் ஷர்மா ! என்ன சாதனை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. 164 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 1 ஓவர் மீதமிருக்கையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யும்போது ரோஹித் ஷர்மா முதுகு பிரச்சனையால் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். லெக் சைட் பந்தை விளாச முயற்சித்தபோது முதுகின் பின்பகுதியில் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஃபிசியோக்கள் களத்துக்கு வந்தபோது அவர்களுடன் ஆலோசித்த ரோஹித், அதோடு களத்திலிருந்து வெளியேறினார். இப்போது இந்திய அணியின் மருத்துவக் குழு அவரைத் தீவிரமாகக் கண்கானித்து வருகிறது.

ஐந்தே பந்துகள்தான்.. தோனி,கோலியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரோஹித் ஷர்மா ! என்ன சாதனை ?

இந்தப் போட்டியில் 5 பந்துகள் சந்தித்த ரோஹித் ஷர்மா 11 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு ஃபோரும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அந்த சிக்ஸருக்கு அவர் அடித்த புல் ஷாட் கிட்டத்தட்ட டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் பொசிஷனில் நின்றிருந்த ஃபீல்டர் டொமினிக் டிரேக்ஸிடம் கேட்ச் ஆகியிருக்கும். ஆனால் அவர் கைகளில் பட்டு அந்தப் பந்து சிக்ஸர் ஆனது.

இந்தப் போட்டியில் 5 பந்துகளே சந்தித்திருந்தாலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக 60 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. இதற்கு முன் கேப்டனாக இருந்த விராட் கோலி, கேப்டனாக இருந்த 50 சர்வதேச டி20 போட்டிகளில் 59 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி 34 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலியை முந்த ரோஹித் ஷர்மா எடுத்துக்கொண்டது வெறும் 34 போட்டிகள் தான்! சர்வதேச ஆண்கள் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன்கள் ரோஹித் ஷர்மா - 60 விராட் கோலி - 59 மஹேந்திர சிங் தோனி - 34.

ஐந்தே பந்துகள்தான்.. தோனி,கோலியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ரோஹித் ஷர்மா ! என்ன சாதனை ?

ரோஹித் ஷர்மா களத்தில் இருந்து வெளியேறிய பிறகு சூர்யகுமார் யாதவ் இந்திய அணியைக் கரைசேர்க்கும் பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்டார். 44 பந்துகள் சந்தித்த சூர்யா 76 ரன்கள் விளாசி டொமினிக் டிரேக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் 8 ஃபோர்களும் 4 சிக்ஸர்களும் விளாசினார் அவர். இந்தப் போட்டியை வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்தியா. தன்னுடைய அரைசதத்தை 26 பந்துகளில் சந்தித்தார் சூர்யகுமார் யாதவ். அவரும் ஷ்ரேயாஸ் ஐயரும் சேர்ந்து அமைத்த கூட்டணி இந்திய அணியின் வெற்றியை சீக்கிரமே உறுதி செய்தது. இந்த இணை 86 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியாக அதிரடியாக விளையாடிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இந்தக் காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் இத்தொடரில் மீதமிருக்கும் கடைசி 2 போட்டிகளிலும் தான் பங்கேற்கப்போவதாகவும் கூறினார். "இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன். அடுத்த போட்டிக்கு இன்னும் சில தினங்கள் இருக்கின்றன. அப்போது நலமாக இருப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார் ரோஹித்

banner

Related Stories

Related Stories