கடந்த மே 13ஆம் தேதி அந்தமானில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை படிப்படியாக முன்னேறி முன்கூட்டியே இந்தியாவை எட்டியது. அதன் படி கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக இருந்தது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் கனமழையை கொடுத்ததோடு, பல இடங்களிலில் வெள்ளபெருக்குக்கும் காரணமாக அமைந்தது.
ஏற்கனவே இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயல்புக்கு அதிகமாக மழை பெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை நிறைவு பெறுவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 15 ஆம் தேதியோடு இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து நிறைவு பெறுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.