விளையாட்டு

சுப்மன் கில் திறமையான வீரர்.. ஆனால்: பொடி வைத்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

சுப்மன் கில் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடத் தொடங்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில்  திறமையான வீரர்.. ஆனால்: பொடி வைத்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியை வென்று தொடரை வென்றிருக்கிறது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி. ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது போட்டியில் 312 என்ற மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. கடைசி கட்டத்தில் இலக்கை எட்ட இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை விளையாடி அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் ஆல் ரவுண்டர் அக்‌ஷர் படேல். தன்னுடைய அதிரடியால் இந்தியாவை வெற்றி பெற வைத்தவர், ஒரு அற்புதமான சிக்ஸர் மூலம் ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் போன்றவர்களும் இந்திய வெற்றியில் மிக முக்கிய அங்கம் வகித்தனர்.

கேப்டன் ஷிகர் தவான் உடன் ஓப்பனராகக் களமிறங்கிய சுப்மன் கில் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். முதல் போட்டியில் நன்றாக ஆடியிருந்த தவான், இந்தப் போட்டியில் மிகவும் தடுமாறினார். கடைசியில் 31 பந்துகளில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் இந்திய அணியின் இப்போதைய கேப்டன். அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 49 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். சிறப்பாக ஆடியிருந்தாலும், ஒரு மோசமான நேரத்தில் ஸ்கூப் ஆட நினைத்து அதன் டைமிங் சரி இல்லாததால் பௌலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில்  திறமையான வீரர்.. ஆனால்: பொடி வைத்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

இதுவரை விளையாடியிருக்கும் 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அரைசதம் கடந்திருக்கிறார் சுப்மன் கில். அவரின் இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு பேசிய சல்மான் பட், கூடிய விரைவில் கில் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடத் தொடங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

"சும்பன் கில் நன்றாகவே விளையாடினார். ஆனால் மீண்டும் இன்னொரு முறை நல்ல தொடக்கத்துக்குப் பிறகும் தன்னுடைய விக்கெட்டை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார். அதை அவர் இப்போது தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடும்போது அவர் தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸ்கள் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு அவ்வளவு திறமை இருக்கிறது" என்று தன்னுடைய யூ டியூப் சேனலில் பேசியிருக்கிறார் சல்மான் பட்.

சுப்மன் கில்  திறமையான வீரர்.. ஆனால்: பொடி வைத்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பெஞ்ச் பலத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் சல்மான் பட். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தத் தொடரில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பலரும் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஒரு போட்டி மீதம் இருக்கும்போதே தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி. "இந்திய அணியின் பெஞ்ச் மிகவும் பலமாக இருக்கிறது. அவர்கள் சரியான முன்னேற்றப் பாதையில் இருக்கிறார்கள்.

அணியின் பெஞ்ச்சில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல பெரிய வீரர்கள் இல்லை என்றாலும் அணியின் தரத்தில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம் எனில், இந்த வீரர்களுக்கு அணியின் நிர்வாகம் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் வீரர்களும் சிறப்பாக விளையாடுகின்றனர். அணியின் தேவைகள் சரியான விதத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருக்கிறார் சல்மான் பட்.

banner

Related Stories

Related Stories