விளையாட்டு

"ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய கேப்டன் இவர்தான்" - இளம் வீரரை கைகாட்டிய முன்னாள் வீரர்!

ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் திகழ்வார் என இந்திய முன்னாள் வீரர் அருண் லால் கூறியுள்ளார்.

"ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய கேப்டன் இவர்தான்" - இளம் வீரரை கைகாட்டிய முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு எதிர்காலத்தில் இந்திய அணியை வழநடத்தக்கூடிய நல்ல கேப்டன்சி ஆப்ஷனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருப்பார் என்று கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அருன் லால். ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் இருவரும் இல்லாதபோது, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் ரிஷப் பண்ட். அதுமட்டுமல்லாமல் இப்போது இந்திய அணியின் லீடர்ஷிப் குரூப்பிலும் இருக்கிறார்.

ரிஷப் பண்ட்டால் நெருக்கடியை நன்றாக சமாளிக்க முடியும் என்பதாலும், அவர் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிக்காட்ட பயப்படாததாலும் நிச்சயம் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பண்ட் இருப்பார் என்று கூறியிருக்கிறார் அருன் லால். அந்த குணங்கள் தான் ஒரு கேப்டனை உருவாக்குகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அருன் லால்.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அருன் லாலிடம், ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டன் ஆக சரியான ஆளா என்று கேட்கப்பட்டது. அதற்கு "நிச்சயமாக. என்னைப் பொறுத்தவரை ஒரு கேப்டன் அந்த அணியின் டாப் 3 வீரர்களுள் ஒருவராக இருக்கவேண்டும். ரிஷப் பண்ட், தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடுவதற்கு கொஞ்சம் கூட பயப்படுவது இல்லை. அவர் நெருக்கடியை நன்றாகக் கையாளவும் செய்கிறார். அதுமட்டுமல்லாமல், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணியை மீட்டெடுக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வீரர் நிச்சயம் ஒரு நல்ல கேப்டனாக இருப்பார்.

"ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய கேப்டன் இவர்தான்" - இளம் வீரரை கைகாட்டிய முன்னாள் வீரர்!

ரிஷப் பண்ட் போன்ற ஒரு அக்ரஸிவான வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் அது நிச்சயம் நல்ல விஷயமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார் அருன் லால். தன் கரியரில் மிக விரைவாகவே கேப்டன்சி அனுபவம் பெற்றுவிட்டார் ரிஷப் பண்ட். அவர் இந்திய தேசிய அணிக்கு அறிமுகம் ஆவற்கு முன்பே டெல்லி ரஞ்சி டிராபி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் இப்போது டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக இருக்கிறார் பண்ட். இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், தன் முதல் ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரிஷப் பண்ட். இதற்கு முன்பு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மை ஒருநாள் போட்டிகளில் காட்ட முடிவதில்லை என்று ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய விமர்சனம் இருந்தது. ஆனால், இன்னும் சில காலத்தில் வைட் பால் ஃபார்மட்டிலும் ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னராக உருவெடுத்துவிடுவார் என்று கூறியிருக்கிறார் அருன் லால்.

"ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய கேப்டன் இவர்தான்" - இளம் வீரரை கைகாட்டிய முன்னாள் வீரர்!

"பண்ட் தொடர்ச்சியாக விளையாடினால், அவர் இந்திய அணிக்கு ஒரு ஹீரோவாக உருவெடுப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுபராக இருந்தால், சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அவர்களால் வைட் பால் ஃபார்மட்டிலும் சிறப்பாக விளையாட முடியும். அதேசமயம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையடுபவர்களால் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க பல திறமைகள் தேவை. வேறு வேறு விதமான நெருக்கடிகளை சமாளிக்கக் கூடிய திறன் வேண்டும்.

ஐந்து நாள் போட்டிகளைக் கையாளக் கூடிய ஃபிட்னஸ் வேண்டும். இரண்டு வகையான இந்தப் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். இது சதம் அடிப்பதைப் பற்றியது அல்ல. மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையில் போட்டியின் முடிவை மாற்றக்கூடியதாக அந்த சதம் இருக்கவேண்டும். ரிஷப் பண்ட் அப்படியான சதங்கள் அடித்திருக்கிறார். 500/4 என்ற சூழ்நிலையில் சதம் அடிப்பது வேறு, 50/5 என்ற சூழ்நிலையில் சதம் அடிப்பது வேறு. இந்த மாதிரியான இன்னிங்ஸ்கள் தான் நெடுங்கால பேசப்படும்" என்று கூறியிருக்கிறார் அருன் லால்.

banner

Related Stories

Related Stories