விளையாட்டு

பும்ராவை கவனமாக கையாள வேண்டும்.. இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

உலகில் இருக்கும் ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளரையும் போல் அவரை இந்திய அணி மிகச் சிறப்பாகக் கையாளவேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

பும்ராவை கவனமாக கையாள வேண்டும்.. இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Updated on

சமீப காலமாக தன்னுடைய மிகச் சிறந்த செயல்பட்டால் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்துக்கொண்டிருக்கிறார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. அதுவும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவருடைய செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதால், அனைவரும் பும்ரா தான் அனைத்து ஃபார்மட்டிலுமே உலகின் மிகச் சிறந்த பௌலர் என்று பலரும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியவர், முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

பும்ராவை கவனமாக கையாள வேண்டும்.. இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்படும் இந்திய வீரர்களில் ஜஸ்ப்ரித் பும்ராவும் ஒருவர். டெஸ்ட் போட்டிகள், டி20 உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களுக்கு எல்லாம் அவர் தயாராக இருக்கும் வகையில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து இந்திய அணி சரியாக அவரைக் கையாளவேண்டும் என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்.

"உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் நிச்சயம் பும்ராவும் ஒருவர். உலகில் இருக்கும் ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளரையும் போல் அவரை இந்திய அணி மிகச் சிறப்பாகக் கையாளவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு அணிக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய சொத்து. ஆம், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் அளவுக்கு ஸ்பின்னர்களுக்கு வேலைப்பளு இருப்பதில்லை" என்று ஒரு நிகழ்ச்சியின் போது கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் ஹாக்.

பும்ராவை கவனமாக கையாள வேண்டும்.. இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

"டெஸ்ட் போட்டிகள், டி20 உலகக் கோப்பை, மற்ற முக்கிய தொடர்களிலெல்லாம் பும்ரா தன்னுடைய சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும் எனில், ஃபிட்னஸ் விஷயத்தில் அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உச்சபட்ச ஃபிட்னஸில் இருக்கவேண்டும். அணிகளின் செயல்பாடுகளை ஆராயும்போது அங்கே பும்ராவின் செயல்பாடு சுமாராக இருந்தால், அது அவருடைய அதீத வேலைப்பளுவின் காரணமாகத்தான் இருக்கும்".

"2003 உலகக் கோப்பையில் பிரெட் லீ பற்றிய ஒரு குட்டி ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன். அந்த உலக்க கோப்பை தொடருக்கு முன்பு எங்களுக்கு ஒரு டெஸ்ட் தொடர் இருந்தது. ஆனால், உலகக் கோப்பைக்குச் செல்லும் முன் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கவேண்டும் என்பதுதான் பிரெட் லீக்கு அவசியமானதாக இருந்தது. கடைசியில் பார்த்தால் அந்தத் தொடரில் வீசப்பட்ட பல அதிவேக பந்துகளை வீசியிருந்தார் லீ. அது நடந்ததற்குக் காரணம், உலகக் கோப்பைக்கு முன் உச்சபட்ச ஃபார்மை எட்டுவதற்காக ஃபிசியோக்களுடன் அமர்ந்து திட்டமிட்டது தான்.

பும்ராவை கவனமாக கையாள வேண்டும்.. இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

பத்திரிகையாளர்களாக, வர்ணனையாளர்களாக சில சமயங்களில் கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் அதிமுக்கியமான சில விஷயங்களைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி இருவரையும் நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும்" என்று கூறியிருக்கிறார் ஹாக். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது பற்றியும், முகமது சிராஜின் செயல்பாடுகள் பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.

"இது நல்ல விஷயம் தான். முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். ஆனால் அவை எல்லாம் ஒரு வகையில் நல்ல பாடம் தான். கிட்டத்தட்ட 1996ம் ஆண்டு நான் இந்தியாவுக்கு வந்துவிட்டுச் சென்றது போலத்தான். நான் கற்றுக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருந்தது.

பும்ராவை கவனமாக கையாள வேண்டும்.. இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

இங்கிலாந்தில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்று அவரைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு முன் ஆஸ்திரேலியாவில் அவர் என்ன செய்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் காயத்தால் அவதிப்பட்டபோது இவர் அந்த பௌலிங் யூனிட்டை எப்படி வழிநடத்தினார் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்தப் போட்டியில் பௌலிங்கை சிறப்பாக வழிநடத்தி இந்தியாவுக்கு தொடரை வென்றுகொடுத்தார். தைரியமும் நல்ல குணாதீசியமும் கொண்டவர் அவர். அவ்வப்போது சில மோசமான தொடர்கள் அமையவே செய்யும்" என்று கூறியிருக்கிறார் ஹாக்.

banner

Related Stories

Related Stories