விளையாட்டு

ஓய்வு என்ற பெயரில் கோலிக்கு சொகுசு வாழ்க்கையா? இதை ஏற்கமுடியாது! காட்டமாக விமர்சித்த முன்னாள் வீரர்!

ஓய்வு என்ற பெயரில் சில வீரர்களுக்கு பி.சி.சி.ஐ வீரர்களுக்கு சொகுசு வாழ்க்கை கொடுக்கிறது என முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் விமர்சித்துள்ளார்.

ஓய்வு என்ற பெயரில் கோலிக்கு சொகுசு வாழ்க்கையா? இதை ஏற்கமுடியாது! காட்டமாக விமர்சித்த முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக விராட் கோலி, ரோகித் ஷர்மா போன்ற வீரர்கள் ஃபார்ம் அவுட் பிரச்சனையில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு அடுத்தடுத்து வந்த தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டது. அதில் இருந்து திருப்ப அணிக்கு வந்தாலும் விரைவில் ஆட்டமிழக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மோதவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு என்ற பெயரில் கோலிக்கு சொகுசு வாழ்க்கையா? இதை ஏற்கமுடியாது! காட்டமாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இதில் முன்னணி வீரரான விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தொடர்ச்சியாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் நிலையில், அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலிக்கு அதிகம் வாய்ப்பளித்தால் மட்டுமே அவர் தனது பழைய ஃபார்முக்கு திரும்ப முடியும் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பி.சி.சி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஒரு வீரர் நன்றாக ஆடாத போது அவர் அதிக போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்ப நினைப்பார். ஆனால் இந்த நடைமுறை தற்போது குறைந்துவிட்டது. ஓய்வில் எப்படி ஒரு வீரர் ஃபார்முக்கு திரும்ப முடியும்?

ஓய்வு என்ற பெயரில் கோலிக்கு சொகுசு வாழ்க்கையா? இதை ஏற்கமுடியாது! காட்டமாக விமர்சித்த முன்னாள் வீரர்!

ஓய்வு என்ற பெயரில் பி.சி.சி.ஐ வீரர்களுக்கு சொகுசு வாழ்க்கை கொடுக்கிறது. ஆனால், இது அனைத்து வீரர்களுக்கும் கிடைப்பதில்லை. கிரிக்கெட் வீரர் விளையாடும் நாட்கள் என்பது குறைவுதான். விராட் கோலிக்கு உண்மையில் காயம் ஏற்பட்டிருந்தால், ஓய்வு எடுப்பது தவறில்லை. ஆனால் ஃபார்முக்கு திரும்ப ஓய்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" காட்டமாக கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories