விளையாட்டு

சின்ன தவறால் சாதனையை தவற விட்ட இந்திய வீரர்கள்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறியது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டின் முகமாகக் கருதப்படும் ஜோ ரூட் போன்ற ஒரு வீரர் கூட சிலபல தருணங்களில் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை அடித்தது தனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது என்று கூறினார் லாய்ட்.

சின்ன தவறால் சாதனையை தவற விட்ட இந்திய வீரர்கள்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறியது என்ன?
Gareth Copley
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான முக்கிய காரணம் என்ன என்பதைப் பற்றிய தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான டேவிட் லாய்ட்.

கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் அரிய வாய்ப்பைப் பெற்றிருந்தது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால், அந்த வாய்ப்பை இந்திய அணியால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் சுமாராக பேட்டிங் செய்த இந்திய அணி, ஒரு பெரிய முன்னிலை பெறும் வாய்ப்பை இழந்தது. அது ஒரு பக்கம் இருக்க, இங்கிலாந்து அணி யாரும் நம்ப முடியாத வகையில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. புகழ் பெற்ற இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 377 என்ற மிகப்பெரிய ஸ்கோரை 80 ஓவர்களுக்குள்ளாகவே சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அந்த அணி. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என டிரா செய்தது இங்கிலாந்து.

சின்ன தவறால் சாதனையை தவற விட்ட இந்திய வீரர்கள்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறியது என்ன?

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான டேவிட் லாய்ட், இந்திய அனியின் வெற்றியைப் பறித்த அந்த முக்கியமான காரணத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். இந்தப் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்கியது. ஆல் ரவுண்டர் ஜடேஜா மட்டும்தான் அணியின் ஒரே ஸ்பின்னராக செயல்பட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் அந்த இடத்தில் தான் தவறு செய்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் லாய்ட்.

சின்ன தவறால் சாதனையை தவற விட்ட இந்திய வீரர்கள்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறியது என்ன?

"இதை நான் சொல்வேன் என்று எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், சொல்லித்தான் ஆகவேண்டும். ஒரு தரமான ஸ்பின்னர் இல்லாமல் இந்திய அணி தடுமாறியிருக்கிறது. ரவீந்திர ஜடேஜாவை அணியில் இணைத்து மிகப்பெரிய பேட்டிங் யூனிட்டோடு களமிறங்க இந்திய அணி முடிவெடுத்துவிட்டது. ஒரு ஸ்பின்னராக இங்கிலாந்தில் அவர் மிகவும் வேகமாக, அதிக பௌன்ஸ் இல்லாமல் பந்துவீசக்கூடியவர். நல்ல பௌன்ஸும் சுழலும் இணையும் போது இங்கிலாந்தில் அது நல்ல பலனைக் கொடுக்கும். அதை ரவிச்சந்திரன் அஷ்வின் செய்திருப்பார். ஆனால், இந்திய ஒரு மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது. அதன் பலனையும் அனுபவித்துவிட்டது" என்று கூறியிருக்கிறார் லாய்ட்.

கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் பேசப்பட்டுவரும் இங்கிலாந்து அணியின் 'Bazball' அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களின் மிகப்பெரிய ரன் சேஸை செய்வதற்குக் காரணமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முகமாகக் கருதப்படும் ஜோ ரூட் போன்ற ஒரு வீரர் கூட சிலபல தருணங்களில் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை அடித்தது தனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது என்று கூறினார் லாய்ட்.

சின்ன தவறால் சாதனையை தவற விட்ட இந்திய வீரர்கள்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறியது என்ன?

"நாம் பார்த்துக்கொண்டிருப்பதை நினைத்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளின் ஐந்தாம் நாள்களில் எல்லா முடிவுகளும் சாத்தியமாகும் நிலை உருவாகிக்கொண்டே இருக்கிறது. இங்கிலாந்தும் ஒவ்வொரு முறையும் ரன்கள் குவித்துக்கொண்டே இருக்கிறது. அதுவும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஸ்லோ மோஷனில் பார்க்கும்போது இன்னும் பிரமிப்பாக இருந்தது. இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பேரதிர்ச்சியாக இருக்கிறது" என்றும் கூறினார் அவர்.

banner

Related Stories

Related Stories