விளையாட்டு

கூல் கேப்டன் பிறந்த நாள்.. முதல்வர்கள் முதல் ரசிகர்கள் வரை: வாழ்த்து மழையில் தல தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உட்பட பலரும் கொண்டாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கூல் கேப்டன் பிறந்த நாள்.. முதல்வர்கள் முதல் ரசிகர்கள் வரை: வாழ்த்து மழையில் தல தோனி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்போது பலரின் பெயர்கள் முன்வந்தாலும் தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி.

இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையை மாற்றியவரும் இவர்தான்.

கூல் கேப்டன் பிறந்த நாள்.. முதல்வர்கள் முதல் ரசிகர்கள் வரை: வாழ்த்து மழையில் தல தோனி!

எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் பல போட்டிகளில் காப்பாற்றியிருக்கிறார்.

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்துள்ளார். தோல்வியோ, வெற்றியோ அதை எப்போதும் சகஜமாக எடுத்துக் கொள்வார்.

கூல் கேப்டன் பிறந்த நாள்.. முதல்வர்கள் முதல் ரசிகர்கள் வரை: வாழ்த்து மழையில் தல தோனி!

விளையாட்டு களத்தில் அவரை ஆக்ரோஷமாக யாரும் பார்த்தே இருக்க முடியாது. ஆனால் இவரின் புன்னகையை யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்று ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையில் சென்னை அணி 4 முறை கோப்பை வென்றுள்ளது.

சர்வதேச தொடராக இருந்தாலும் சரி, ஐ.பி.எல். தொடராக இருந்தாலும் சரி அனைத்திற்கும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார் எம்.எஸ்.தோனி. தல தோனியின் பிறந்த நாளை இன்று அரவது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தோனியுடன் களத்தில் விளையாடிய சக வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பல மாநில முதல்வர்களும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ’குட்டி தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரின் பிறந்த நாள் வாழ்த்தில்,"எனது பெரிய சகோதரருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாளர்கள், வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி மஹிபாய்.

கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பார்” என தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவை போன்று எம்.எஸ்.தோனிக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் எம்.எஸ்.தோனி தனது குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories