விளையாட்டு

ind vs eng.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓபன் டாக்!

Bazball பற்றிய எனக்குத் தெரியாது என ராகுல் டிராவிட் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

ind vs eng.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓபன் டாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் 'bazball' அணுகுமுறை குறித்து இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிராவிட் கொடுத்த பதில் பெரும் கவனத்தைப் பெற்றது.

'Bazball' - சமீப காலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அரங்கில் இந்த வார்த்தை மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணி பெரும் சரிவை சந்தித்துக்கொண்டிருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் பிரெண்டன் மெக்கல்லம். அவர் பதவியேற்ற பிறகு புதிய அணுகுமுறையைக் கையில் எடுத்திருக்கிறது இங்கிலாந்து அணி. அதன் மூலம் தொடர்ந்து வெற்றிகளையும் பதிவு செய்து வருகிறது. அதுவே 'Bazball' என்றும் அழைக்கப்படுகிறது

ind vs eng.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓபன் டாக்!

மெக்கல்லம் பதவியேற்ற பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியை வைட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி. அதன்பிறகு இந்திய அணியை பிர்மிங்ஹமில் இப்போது வீழ்த்தியிருக்கிறது அந்த அணி. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் 'Bazball' பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் நகைச்சுவையான விதத்தில் பதில் தெரிவித்திருக்கிறார் டிராவிட்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதே அணுகுமுறையைக் கடைபிடித்த இங்கிலாந்து அணி 284 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி நல்ல முன்னிலை பெற்றதால், பலரும் இந்த அணுகுமுறையை விமர்சித்தனர். இருந்தாலும், 378 என்ற மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது இங்கிலாந்து. ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ இருவரும் மிகச் சிறப்பாகி விளையாடி சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். அதனால், இப்போது ரசிகர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் இந்த 'Bazball' ஆட்டத்தைக் கொண்டாடிவருகின்றனர்.

ind vs eng.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓபன் டாக்!

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இழந்த பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது ஒரு பத்திரிகையாளர், "மக்கள் அனைவரும் இப்போது Bazball பற்றி அதிகமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சிலரோ, இது கிரிக்கெட்டையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும் என்கிறார்கள். ஒரு பயிற்சியாளராக இந்த Bazball பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார். அதற்கு "அது என்னவென்றே எனக்குத் தெரியாது" என்று டிராவிட் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல, ஒட்டுமொத்த அறையும் சிரிப்பால் நிறைந்திருக்கிறது. அப்படி விளையாட்டாகக் கூறியிருந்தாலும், இங்கிலாந்தின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் டிராவிட்.

"கடந்த சில மாதங்களாக அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று நிச்சயம் கூறுவேன். அதிலும் சேஸ் செய்யும்போது அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இங்கிலாந்து மைதானங்களில் நான்காவது இன்னிங்ஸில் ஒரு இலக்கை சேஸ் செய்வது எளிதானது அல்ல. எந்த வகையான கிரிக்கெட் விளையாடுவதாக இருந்தாலும், என்ன மாதிரியான வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள், அவர்கள் எப்படியான ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்தால், நல்ல பாசிடிவான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆடியதைப் போல" என்று கூறியிருக்கிறார் டிராவிட்.

ind vs eng.. இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓபன் டாக்!

இந்தத் தோல்வியால், படோடி டிராபி டெஸ்ட் தொடரை 2-2 என டிரா செய்திருக்கிறது இந்திய அணி. கடந்த ஆண்டு நடந்த 4 டெஸ்ட்களில் இந்தியா இரண்டிலும், இங்கிலாந்து ஒன்றிலும் வெற்றி பெற்றிருந்தன. இங்கிலாந்து அணி லீட்ஸ் போட்டியில் வென்றிருந்தது. இந்தியாவோ, லார்ட்ஸ் மற்றும் ஓவல் போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

banner

Related Stories

Related Stories