விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது சதம்.. ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய ‘ஜோ ரூட்’ !

சிறப்பான செயல்பாட்டால், சுனில் கவாஸ்கர், ரிக்கி பான்டிங், விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களை முந்தி சாதனைகள் படைத்திருக்கிறார் ரூட்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது சதம்.. ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய ‘ஜோ ரூட்’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்த சீசனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். அடுத்தடுத்து சதங்களாக விளாசி ரன் மெஷினாக விளங்கிக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இந்த அசாத்திய ஃபார்மை இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்தார் அவர். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சதம் அடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார் அவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது சதம்.. ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய ‘ஜோ ரூட்’ !

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-2 என டிரா செய்தது இங்கிலாந்து. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதையும் இவரே வென்றார். தன்னுடைய இந்த சிறப்பான செயல்பாட்டால், சுனில் கவாஸ்கர், ரிக்கி பான்டிங், விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களை முந்தி சாதனைகள் படைத்திருக்கிறார் ரூட்.

இந்த டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் காலை சதத்தை கடந்தார் ரூட். அது இந்த வருடத்தில் அவருடைய ஐந்தாவது டெஸ்ட் சதமாக அமைந்தது. இந்த இன்னிங்ஸின் மூலம், இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கவாஸ்கரை முந்தி இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் ரூட். 2012ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் ரூட்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது சதம்.. ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய ‘ஜோ ரூட்’ !

அதில் 62.72 என்ற அட்டகாசமான சராசரியோடு 2,509 ரன்கள் குவித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 38 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 2,483 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர்களில் 2,535 ரன்களோடு முதலிடத்தில் இருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இனி ரூட் முந்த வேண்டியது இவரை மட்டும்தான்.

அதேபோல், இந்த சதம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் அடிக்கும் ஒன்பதாவது சதம். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் அவர். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் அந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது சதம்.. ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய ‘ஜோ ரூட்’ !

இந்தியாவுக்கு எதிராக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 8 சதங்கள் அடித்திருக்கிறார். 2555 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் பான்டிங்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், டெஸ்ட் அரங்கில் இது ஜோ ரூட் அடித்திருக்கும் 28வது சதம். இந்த அற்புதமான சதம், 'ஃபேப் 4' என்று அழைக்கப்படும் இந்தக் காலத்தின் 4 சிறந்த வீரர்களுக்கு மத்தியிலான போட்டியில் இவரை முதலிடத்தில் அமரவைத்திருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது சதம்.. ஜாம்பவான்கள் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய ‘ஜோ ரூட்’ !
Stephen Hall

28வது சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் முந்தியிருக்கிறார் ரூட். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 15வது இடத்தில் இருக்கிறார் ரூட். ஆனால், தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் முதலிடத்தில் இருப்பது இவர் தான்!

banner

Related Stories

Related Stories