விளையாட்டு

விமர்சித்தவரே இன்று பாராட்டு.. ரிஷப் பண்ட் ஆட்டத்தை புகழ்ந்த முன்னாள் பயிற்சியாளர்!

இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆட்டத்தை புகழ்ந்து பேசியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

விமர்சித்தவரே இன்று பாராட்டு.. ரிஷப் பண்ட் ஆட்டத்தை புகழ்ந்த முன்னாள் பயிற்சியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது ரிஷப் பண்ட்டோடு கொண்டிருந்த உரையாடலைப் பற்றி தற்போது கூறியிருக்கிறார் ரவி சாஸ்திரி. ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் மிகச் சிறப்பான சில டெஸ்ட் இன்னிங்ஸ்களை பண்ட் ஆடிக்கொண்டிருந்தபோது ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போதிருந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எதிர்பாராத வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் பண்ட். அவரின் பயாறியாத அணுகுமுறையால் பல உலகத்தரமான பௌலர்களைப் பந்தாடியிருக்கிறார் பண்ட். அவரோடு ரவி சாஸ்திரி பேசிய சில வார்த்தைகள் பண்ட்டை இன்னும் வித்தியாசமாக விளையாடவைத்திருக்கிறது.

"கடந்த ஆண்டு ரிஷப் பண்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'தொடர்ந்து ஒரே மாதிரி நீ அவுட் ஆகிக்கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு சலித்துப்போய்விட்டது. உனக்கு அப்படித் தோன்றவில்லையா? நீ ஏன் முற்றிலும் வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்து பார்க்கக்கூடாது. ரிவர்ஸ் ஸ்வீப் போல் ஏதாவது விநோதமான ஒன்றை முயற்சி செய்து பார்' என்று கூறினேன். அதைக் கேட்டதும் அவர் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. ஒரு வீரரின் திறமைய மதிப்பது மிகவும் முக்கியம்" என்று கூறினார் ரவி சாஸ்திரி.

விமர்சித்தவரே இன்று பாராட்டு.. ரிஷப் பண்ட் ஆட்டத்தை புகழ்ந்த முன்னாள் பயிற்சியாளர்!

"ஜேக் லீச் பந்துவீச்சில் இரண்டு ரிவர்ஸ் ஸ்வீப்கள் ஆடினார். அடுத்த போட்டியில் ஆண்டர்சன் பந்துவீச்சிலும் அதையே செய்தார். அடுத்ததாக, அதிவேக பந்துவீச்சாளர்களுள் ஒருவரான ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சிலும் ஒன்றை அடித்தார் ரிஷப் பண்ட்.

இந்த அணுகுமுறை பிர்மிங்ஹமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்தார் ரிஷப் பண்ட். இந்தப் போட்டியில் 89 பந்துகளில் சதமடித்தார் அவர். இதன்மூலம் அதிவேகமாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார். இந்தப் போட்டியில் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த பண்ட், தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார். 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியை, தன் அட்டகாசமான செயல்பாட்டின் மூலம் நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றார் பண்ட். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 222 ரன்கள் எடுத்தனர்.

விமர்சித்தவரே இன்று பாராட்டு.. ரிஷப் பண்ட் ஆட்டத்தை புகழ்ந்த முன்னாள் பயிற்சியாளர்!

ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகி வெளியேறியபோது ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா இருவருமே அதிக பந்துகள் ஆடியிருக்கவில்லை. சிறிது நேரம் களத்தில் நின்றவர்கள், அதன்பிறகு தங்கள் அதிரடி ஆட்டத்தைக் காட்டத் தொடங்கினார்கள். வழக்கம்போல், ரிஷப் பண்ட்டின் அதிரடி இங்கிலாந்து அணிக்கு பெரும் பிரச்சனையை விளைவித்தது. குறிப்பாக ஜேக் லீச் பந்துவீச்சை குறிவைத்துத் தாக்கினார் அவர். ஒரு ஓவரில் இரண்டு ஃபோர்களும், ஒரு சிக்ஸரும் அடித்த பண்ட், இன்னொரு ஓவரில் 22 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து 4,6,4,6 என அடுத்தடுத்து பௌண்டரிகளாக நொறுக்கினார். 51 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 38 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எடுத்தார்.

"அவர் நேரத்தை வீணடிப்பதில்லை. இன்றைய போட்டியில் அவர் தன்னுடைய இன்னிங்ஸை கட்டமைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் அதிக சவால் நிறைந்த ஷாட்களை அடிக்க அவர் தயாராக இருக்கவில்லை. களத்திலிருந்து இறங்கி வந்திருந்தாலும், அதையெல்லாம் மிகவும் கணக்கிட்டே செய்தார். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர் அப்படியொரு தீர்க்கமான வீரர். களத்தில் நுழைந்த உடனேயே எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடுகிறார்" என்று ரிஷப் பண்ட் பற்றிப் பெருமையாகக் கூறியிருக்கிறார் ரவி சாஸ்திரி.

banner

Related Stories

Related Stories