விளையாட்டு

WWE-ல் 20 வருடங்களைக் கடந்த JOHN CENA : மரியாதை செய்ய களத்தில் இறங்கும் 90's கிட்ஸின் WWE ஸ்டார்கள்!

90'ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த நாயகன் JOHN CENA WWE விளையாட்டில் நுழைத்து 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.

WWE-ல் 20 வருடங்களைக் கடந்த JOHN CENA : மரியாதை செய்ய களத்தில் இறங்கும் 90's கிட்ஸின் WWE ஸ்டார்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

90'ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் முக்கிய இடம்பிடித்த விளையாட்டு என்றால் அதில் WWE-க்கு பெரும் பங்கு இருக்கிறது. இப்போது அதன் காட்சிகள் போலி என தெரியவந்தாலும் அப்போது அதை உண்மை என்றே நம்பியவர்கள்தான் 90'ஸ் கிட்ஸ். அந்த அளவுக்கு அக்காட்சிகள் உண்மை போலவே தோற்றமளிக்கும்.

எப்போதும் விளையாட்டில் ஒரு கதாநாயகன் இருப்பார். கிரிக்கெட்டிக்கு சச்சின், கால்பந்துக்கு மெஸ்ஸி,ரொனால்டோ போல WWE-யின் நாயகன் என்றால் அது JOHN CENA-தான். தனது ஸ்டைலால் பல லட்சம் இளைஞர்களை கொள்ளை கொண்ட அவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

WWE-ல் 20 வருடங்களைக் கடந்த JOHN CENA : மரியாதை செய்ய களத்தில் இறங்கும் 90's கிட்ஸின் WWE ஸ்டார்கள்!

WWE விளையாட்டில் அவர் 16 முறை உலக சாம்பியனாக திகழ்ந்துள்ளார். WWE- சாம்பியன்ஷிப் என்றாலே JOHN CENA சாம்பியன்ஷிப் பெல்ட்டை சுற்றி விடுவதுதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவு அந்த விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இந்த நிலையில் ஜான் சீனா WWE விளையாட்டுக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இதற்காக WWE ஒரு ப்ரோமாவை வெளியிட்டுள்ளது. அதில் தோன்றிய JOHN CENA தன்னை வளர்த்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

WWE-ல் 20 வருடங்களைக் கடந்த JOHN CENA : மரியாதை செய்ய களத்தில் இறங்கும் 90's கிட்ஸின் WWE ஸ்டார்கள்!

இந்த வீடியோவில் தோன்றிய கிறிஸ் செரிக்கோ, பிரையன் டேனியல்சன் மற்றும் பால் வைட் ஆகியோர் JOHN CENA-வின் சாதனைகளை வாழ்ந்தினர்.

மேலும் டிரிஷ் ஸ்ட்ராடஸ், டிரிபிள் எச், 'ஸ்டோன் கோல்ட்' ஸ்டீவ் ஆஸ்டின், டேனியல் பிரையன் ஆகியோரும் JOHN CENA-வின் பெருமைகளை பேசினர்.

JOHN CENA-வை கொண்டாட நடத்தப்படும் விழாவில் முன்னணி நாயகர்களும் விழா மேடைக்கு வருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதோடு விரைவில் JOHN CENA மீண்டும் WWE போட்டியில் பங்கெடுப்பார் எனவும் தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

banner

Related Stories

Related Stories