விளையாட்டு

" சும்மா சும்மா இதை செய்யாதீர்கள் " - ஊர் சுற்றிய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம்!

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

" சும்மா சும்மா இதை செய்யாதீர்கள் " - ஊர் சுற்றிய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ  கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

சமீபத்தில் முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதேபோல பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அதிகள் திணறியது. இந்த நிலையில் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டி சவாலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

" சும்மா சும்மா இதை செய்யாதீர்கள் " - ஊர் சுற்றிய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ  கண்டனம்!

மேலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே இந்த தொடரை சமம் செய்யமுடியும் என்பதால் அந்த அணி இந்த போட்டியில் ஆக்ரோஷமான விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு சமீப ஆண்டுகளாக காயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ஆனால், இந்த தொடரில் இந்திய அணிக்கு கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடருக்கு முன்னர் அஸ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்து அணியில் இணைந்துள்ளார். அதேபோல பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

" சும்மா சும்மா இதை செய்யாதீர்கள் " - ஊர் சுற்றிய இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ  கண்டனம்!

இந்திய அணியின் நிலமை இப்படி இருக்கும் சூழலில், இந்திய வீரர்கள் பொதுஇடங்களில் நடனமாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இந்த குற்றசாட்டு உண்மை என்றே தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்திய அணியின் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால்தான் கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியின் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories