விளையாட்டு

சிறந்த ஆல்ரவுண்டர்.. நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிப்பார்: ஹர்ஷல் படேலை புகழ்ந்த 2 முன்னாள் வீரர்கள்!

நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிக்கக் கூடியவர் என இந்திய அணி வீரர் ஹர்ஷல் படேலை புகழ்ந்து பேசியுள்ளார் கிரீம் ஸ்மித்.

சிறந்த ஆல்ரவுண்டர்.. நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிப்பார்:  ஹர்ஷல் படேலை புகழ்ந்த 2 முன்னாள் வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியில் எந்த வீரர்களெல்லாம் விளையாடுவார்கள் என்ற விவாதம் கடந்த சில வாரங்களாகவே வலுத்து வருகிறது. ஒவ்வொரு தொடரும் போகப்போக அந்த விவாதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா சமீபத்தில்தான் தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 தொடரில் விளையாடி முடித்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசிப் பொட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு சாதகமான பல விஷயங்கள் நடந்தன. பல வீரர்க்ள் சிறப்பாக செயல்பட்டனர். அதில் ஒரு வீரரைக் குறிப்பிட்டு, 'அவர் ரோஹித் ஷர்மாவின் துருப்புச் சீட்டாக இருப்பார்' என்று கூறியிருக்கிறார் இந்திய ஜாபவான் சுனில் கவாஸ்கர்.

சிறந்த ஆல்ரவுண்டர்.. நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிப்பார்:  ஹர்ஷல் படேலை புகழ்ந்த 2 முன்னாள் வீரர்கள்!

இந்தத் தொடரில் மிகச் சிறப்பாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார், தொடர் நாயகன் விருது வென்றார். 4 இன்னிங்ஸ்களில் அவர் 6 விக்கெட்டுகள் வீழ்த்திருந்தார். இருந்தாலும், இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது ஹர்ஷல் படேல் தான். இந்தத் தொடரில் 12.57 என்ற சிறப்பான சராசரியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஹர்ஷல். எகானமி 7.23 தான். ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார் அவர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் பேசிய கவாஸ்கர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரோடு சேர்ந்து ஹர்ஷல் படேலும் ரோஹித் ஷர்மாவின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஸ்லோ பால்கள் வீசக்கூடியவர் என்பதால் ஹர்ஷல் படேல் பவர்பிளேவிலும் பந்துவீச முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

சிறந்த ஆல்ரவுண்டர்.. நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிப்பார்:  ஹர்ஷல் படேலை புகழ்ந்த 2 முன்னாள் வீரர்கள்!

"புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் இருக்கும்போது, ஹர்ஷல் படேலும் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். ஹர்ஷல் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது ஒரு கேப்டனுக்கு மிகப்பெரிய பலம். தற்போது பவர்பிளேவில் வேகத்தை மாற்றி பந்துவீசுவது அதிகரித்துவருகிறது. அதனால், ஹர்ஷல் படேல் பவர்பிளேவில் பந்துவீசவும் சரியான ஆளாக இருப்பார். அதனால், அவர் நிச்சயமாக இந்திய அணியில் இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித்தும் ஹர்ஷல் படேலை புகழ்ந்திருக்கிறார். அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார் என்று கூறியிருக்கிறார் ஸ்மித்.

சிறந்த ஆல்ரவுண்டர்.. நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிப்பார்:  ஹர்ஷல் படேலை புகழ்ந்த 2 முன்னாள் வீரர்கள்!

"அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். டெத் ஓவர்களில் மிகவும் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய, ஸ்லோ பால்களை சிறப்பாகக் கையாளக் கூடிய வீரர்கள் அதிகமாக இல்லை. மூன்றாவது போட்டியிலிருந்து அவர் சரியான லென்த்தைப் பிடித்து விக்கெட்டுகள் எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அவருக்கு அனைத்து திறமைகளும் இருக்கிறது. பந்துவீச்சில் ஒரு ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார். நெருக்கடியை மிகச் சிறப்பாக சமாளிக்கும் அவர், அப்படியான சூழ்நிலைகளில் மிகவும் தெளிவாகவும் யோசிக்கிறார்" என்று ஹர்ஷல் படேலை புகழ்ந்து பேசியிருக்கிறார் கிரீம் ஸ்மித்.

banner

Related Stories

Related Stories