விளையாட்டு

T20 WC - இந்திய அணியில் தவிர்க்க முடியாத 2 வீரர்கள் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் கூறியது யாரை?

ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்தி இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தவிர்க்கவே முடியாதவர்கள் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

T20 WC - இந்திய அணியில் தவிர்க்க முடியாத 2 வீரர்கள் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் கூறியது யாரை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா சர்வதேச டி20 தொடர், 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யாருக்கு இடம் கிடைக்கும், கிடைக்காது என்பதைப் பற்றிய ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்னும் 15 பேர் கொண்ட அணியை முடிவு செய்யாவிட்டாலும், இந்திய முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். அதுபோல், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்தும் எந்த இரு வீரர்கள் இந்திய அணியின் மிகமுக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

T20 WC - இந்திய அணியில் தவிர்க்க முடியாத 2 வீரர்கள் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் கூறியது யாரை?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியிருக்கும் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் இருவரையும் பற்றி மிகவும் பெருமையாகப் பேசியிருக்கிறார் ஸ்மித். 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்தார்.

அதேபோல், 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமலே இருந்தது. 2022 ஐ.பிஎ.ல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருவருமே இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

T20 WC - இந்திய அணியில் தவிர்க்க முடியாத 2 வீரர்கள் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் கூறியது யாரை?

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 117 ரன்கள் எடுத்தார். அதை 153.9 என்ற அட்டகாசமான ஸ்டிரைக் ரேட்டில் ஸ்கோர் செய்தார். அந்தத் தொடரில் 5 ஓவர்கள் பந்துவீசிய அவர், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதேசமயம், 4 இன்னிங்ஸ்களில் தினேஷ் கார்த்திக் 92 ரன்கள் எடுத்தார். அதுவும் 158.6 என்ற அட்டகாசமான ஸ்டிரைக் ரேட்டில். ஒரு அரைசதமும் அடித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா சர்வதேச டி20 தொடர் முடிந்த பிறகு பேசிய கிரீம் ஸ்மித், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்தி இருவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தவிர்க்கவே முடியாதவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

T20 WC - இந்திய அணியில் தவிர்க்க முடியாத 2 வீரர்கள் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் கூறியது யாரை?

"இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாடவேண்டியிருக்கிறது. இன்னும் பல தொடர்கள் நடக்கவிருப்பதால், அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கும் என்று நம்மால் இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்தி இருவரும் இந்திய அணியின் மிகமுக்கிய அங்கம் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

தினேஷ் காத்திக் அனுபவம் மிக்கவர். அதுவுமில்லாமல் அவர் தற்போது ஆட்டங்களை ஃபினிஷ் செய்யும் விதம் பிரமாதமாக இருக்கிறது. அதேபோல், ஹர்திக் பாண்டியா பல மடங்கு தன் ஆட்டத்தை மேம்படுத்தியிருக்கிறார்.

T20 WC - இந்திய அணியில் தவிர்க்க முடியாத 2 வீரர்கள் : தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் கூறியது யாரை?

தன்னுடைய ஆட்டத்தில் கன்ட்ரோலாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஆல் ரவுண்டராக இருப்பது மிகப்பெரிய பலம். அவரும், ஜடேஜாவும் இருக்கும்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எப்படிவேண்டுமானாலும் பேலன்ஸ் செய்துகொள்ள முடியும்.

அவர்கள் இருவரும் இல்லாத உலகக் கோப்பை அணியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார் ஸ்மித். இந்திய அணி அடுத்து அயர்லாந்துக்கு எதிராக 2 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வீலையாடுகிறது. அடுத்து இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராகவும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

banner

Related Stories

Related Stories