விளையாட்டு

#IPL2022 : அறிமுக சீசனிலேயே சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் : சாதித்துக் காட்டிய ஹர்திக் & கோ! (Photos)

#IPL2022 : அறிமுக சீசனிலேயே சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் : சாதித்துக் காட்டிய ஹர்திக் & கோ! (Photos)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த சீசனின் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். அறிமுக சீசனிலேயே அனுபவமிக்க அணிகளையெல்லாம் தாண்டி குஜராத் அணி சாதித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டத்தை அளித்திருக்கிறது.

நேற்றைய இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 130 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பட்லர் உட்பட முக்கியமான பேட்ஸ்மேன்கள் யாருமே எதிர்பார்த்த அளவுக்கு பெர்ஃபார்ம் செய்திருக்கவில்லை. குஜராத் அணியின் சார்பில் ஹர்திக் பாண்ட்யா, ரஷீத்கான் போன்றோர் மிகச்சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

131 ரன்களை சேஸ் செய்த குஜராத் அணி 18.1 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துவிட்டது. 3 விக்கெட்டுகளை இழந்த போதும் ஹர்திக் பாண்ட்யா, கில், மில்லர் ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்ததால் குஜராத் அணியின் வெற்றி சுலபமானது.

அறிமுக சீசனிலேயே கோப்பையை வெல்வது எப்போதாவது அரிதாக நடக்கும் விஷயம். கடைசியாக ஐ.பி.எல் இன் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக அணியாகவே கோப்பையை வென்றிருந்தது. அதன்பிறகு, இடையிடையே ஐ.பி.எல் இல் புதிய அணிகள் இடம்பெற்றிருந்தாலும் அறிமுக சீசனிலேயே எந்த அணியும் கோப்பையை வெல்லவில்லை. 15 வது சீசனில் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் குஜராத் அணி அறிமுக சீசனிலேயே சாதித்திருக்கிறது.

மெகா ஏலம் முடிந்து அனைத்து அணிகளும் வீரர்களை தேர்வு செய்து முடித்திருந்த சமயத்தில் On paper இல் குஜராத் அணி ரொம்பவே சுமாரான அணியாகவே மதிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் என்பதையும் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. இவரெல்லாம் எப்படி கேப்டனாக முடியும்? கேப்டனுக்கான என்ன தகுதி இவரிடம் இருக்கிறது? என்றே ஹர்திக்கை ஒரு குறை பார்வையுடனேயே பார்த்திருந்தனர்.

ஆனால், இதற்கெல்லாம் இந்த சீசனின் தொடக்கத்தில் இந்த அணி பதிலடி கொடுக்க தொடங்கியது. முதல் 3 போட்டிகளையுமே வென்று காட்டி அசத்தியிருந்தது. வேறு எந்த அணியுமே இவ்வளவு ஆதிக்கமாக இந்த தொடரை தொடங்கியிருக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யாவும் ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தினார். முழுக்க முழுக்க நேர்மறை எண்ணத்தோடும் தெம்பூட்டும் தன்னம்பிக்கையோடும் அணியை பாசிட்டிவ்வாக வழி நடத்தினார்.

பயிற்சியாளரான நெஹ்ரா மற்றும் ஆலோசகரான கேரி கிறிஸ்டன் இருவருமே நல்ல அனுபவமுள்ள ஆட்கள் என்பதால் அவர்களின் உள்ளீடுகளும் அணிக்கு பெரும் பயனை கொடுத்தது.

கேப்டன், பயிற்சியாளர் இவர்கள் எல்லாரையும் தாண்டி குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரருமே அணிக்காக தன்னுடைய பங்களிப்பை பெருமைப்படும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தனர். உயிரை கொடுத்தாவது அணியை வெல்ல வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதனால்தான் அந்த அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த அத்தனை பேருமே மேட்ச் வின்னராக மாறினர். மேலிருந்து கீழ்வரை எல்லாருமே போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்கள். கில் வென்று கொடுப்பார். அவர் இல்லையென்றால் ஹர்திக், ஹர்திக் இல்லையென்றால் மில்லர், மில்லர் இல்லையென்றால் திவேதியா, அவரும் இல்லையென்றால் ரஷீத்கான் என எதோ ஒரு வீரர் நின்று அணியை வெல்ல வைத்துக் கொண்டே இருப்பார். பௌலிங்கிலும் அப்படித்தான். ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது மேட்ச் வின்னர்கள் உருவாகிக் கொண்டே இருந்தனர். வாய்ப்பே இல்லை என நம்பிக்கையிழந்த சூழல்களிலிருந்தெல்லாம் அசாத்தியங்களை நிகழ்த்தி வென்றிருக்கின்றனர்.

இப்போதும் இந்த அணி ஒரு முழுமையான அணி கிடையாது. ஆனால், வெற்றி பெறுவதற்கு என்ன தேவை என்பதை உணர்ந்த அணி. அதை ஒவ்வொரு போட்டியிலும் செய்து காட்டிய அணி. இந்த சீசனில் வேறெந்த அணியை விடவும் போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்கிற வித்தை குஜராத்துக்கே அத்துப்படியாக இருந்தது. அதனால்தான் கோப்பையையும் வென்றிருக்கிறார்கள்.

சீசனின் தொடக்கத்தில் தொடர்ந்து வென்ற போது ஹர்திக் பாண்ட்யாவே தாங்கள் அதிர்ஷ்டத்தால் வெல்கிறோம் என்றும் எங்களின் அதிர்ஷ்டம் தீர்ந்துவிடக்கூடாது என பேசியிருந்தார்.

அதிர்ஷ்டம் மேஜிக் எல்லாம் எல்லா சமயங்களிலும் நிகழாது. எல்லா சமயங்களிலும் நிகழ்வது அதிர்ஷ்டமும் இல்லை. மேஜிக்கும் இல்லை. உழைப்பும் வென்றே. ஆக வேண்டிய தீர்க்கமும் மட்டுமே எல்லா சமயங்களிலும் வெற்றியை நிகழ்த்தும். குஜராத்திற்கு நிகழ்த்தியதை போல!

banner

Related Stories

Related Stories