விளையாட்டு

IPL 2022 : அஷ்வினை முன் இறக்கி லாட்டரியை தவறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்.. சுலபமாக வென்ற டெல்லி.. RR vs DC

IPL 2022 : அஷ்வினை முன் இறக்கி லாட்டரியை தவறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்.. சுலபமாக வென்ற டெல்லி.. RR vs DC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்திருந்தது இந்த போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே 'சஹால் மட்டும் இன்றைக்கு லாட்டரி சீட் வாங்கியிருந்தால், அவருக்குத்தான் லாட்டரி விழுந்திருக்கும். ஆனால், அதை பெறப் போகிற சமயத்தில் அந்த லாட்டரியை சஹால் தொலைத்திருப்பார்' என வேடிக்கையாக ஒரு ட்வீட் செய்திருந்தார்.

சஹால் மட்டுமில்லை. நேற்று ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியுமே லாட்டரியை தவறவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராஜஸ்தான் அணியே முதலில் பேட் செய்திருந்தது. பட்லர் சீக்கிரம் அவுட் ஆன நிலையில் நம்பர் 3 இல் அஷ்வின் இறக்கப்பட்டார். அஷ்வின் நின்று ஆடி அரைசதம் அடித்தார். ஆனால், அரைசதம் அடிக்க 38 பந்துகளை எடுத்துக் கொண்டார். பவர்ப்ளேக்குள் 13 பந்துகளில் 21 ரன்களை அடித்தவர், பவர்ப்ளே முடிந்த பிறகு 25 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். மெதுவாகத்தான் ஆடியிருந்தார். பெரிய ஷாட்களை அவரால் ஆட முடியவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியின் ரன் விகிதமுமே பெரிதாக வேகமெடுக்கவில்லை.

ஹெட்மயர் போன்ற பேட்ஸ்மேன் இல்லாததால் பேட்டிங் ஆர்டரை கொஞ்சம் பெரிதாக்கும் வகையில் அஷ்வின் நம்பர் 3 இல் இறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த மாதிரியான சமயங்களில்தான் முக்கியமான பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடியிருக்க வேண்டும். குறிப்பாக, கேப்டன் சஞ்சு சாம்சன் நம்பர் 3 இல் வந்து ரிஸ்க் எடுத்து ஆடியிருக்க வேண்டும் அல்லது ரியான் பராக் மேலே ஆட வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு அஷ்வினை முன் இறக்கி தங்களுக்கு விழ வேண்டிய லாட்டரியை தாங்களே தவிர்த்துவிட்டனர்.

டெல்லி அணிக்கு டார்கெட் 161 மட்டுமே. ராஜஸ்தான் அணி பந்துவீசும்போதும் அந்த அணிக்கு சில நல்ல காரியங்கள் நடப்பதற்கான அறிகுறி தெரிந்தது. ஆனால், எதுவும் முழுமையாக கைகூடவில்லை. வார்னரும் மிட்செல் மார்ஸூம் அமைத்த கூட்டணியே டெல்லி அணியை வெல்ல வைத்தது. இருவரும் இணைந்து 144 ரன்களை அடித்திருந்தனர். மார்ஸ் 89 ரன்களையும் வார்னர் 52 ரன்களையும் அடித்திருந்தனர். மார்ஸ் வெறும் 1 ரன்னில் இருந்த போது ட்ரெண்ட் போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு வெறித்தனமான யார்க்கரை இறக்கியிருப்பார். மேலோட்டமாக பார்க்கும்போது இந்த யார்க்கர் மார்ஸின் பேட்டில் பட்டதை போன்றுதான் தெரிந்தது. இதனால் போல்ட் சாம்சன் இருவருமே ரிவியூவ் எடுக்க விரும்பவில்லை. ஆனால், ரீப்ளேவில் பார்க்கும்போதுதான் தெரிந்தது, மார்ஸின் பேட்டில் பந்துபடவில்லை. பேடில்தான் பட்டிருந்தது. மேலும் அந்த பந்து சரியாக ஸ்டம்பை தகர்ப்பது போலவும் இருந்தது. இன்னும் கொஞ்சம் கூர்மையாக பார்த்து lbw ரிவியூவ் எடுத்திருந்தால் மார்ஸ் அங்கேயே காலியாகியிருப்பார்.

இதன்பிறகு, சஹால் வீசிய 9 வது ஓவரில் வார்னரின் விக்கெட்டுக்கு இரண்டு வாய்ப்புகள் உருவானது. சஹாலின் ஒரு பந்தை கூக்ளி என நினைத்து வார்னர் ஆட அது லெக் ஸ்பின்னாகி வார்னரை ஏமாற்றியது. இதனால் அந்த பந்தை வார்னர் மிஸ் செய்திருப்பார். மிஸ் ஆன பந்து ஸ்டம்பில் லேசாக உரசி சென்றிருக்கும். ஸ்டம்ப்பில் லைட் கூட எரிந்தது. ஆனால், பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இதனால் வார்னர் தப்பினார். அதே ஓவரில் பவுண்டரி லைனில் நின்ற பட்லருக்கு ஒரு கேட்ச்சை கொடுத்திருப்பார். அந்த கேட்ச் வாய்ப்பை பட்லர் கோட்டைவிட்டிருப்பார். ஒரே ஓவரில் இரண்டு லாட்டரிக்கள் மிஸ் ஆனது.

மேற்கூறிய மூன்று விஷயங்களில் எதாவது ஒன்று சரியாக நிகழ்ந்திருந்தால் கூட போட்டி இன்னும் சுவாரஸ்யமாக சென்றிருக்கும். டெல்லி இவ்வளவு சுலபமாக வென்றிருக்காது. ராஜஸ்தானுக்கும் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். அடுத்தடுத்த போட்டிகளிலும் இதேபோல ராஜஸ்தான் அணி தங்களின் லாட்டரியை தொலைத்துவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories