விளையாட்டு

#BWF_Uber_Cup போட்டியில் PV.சிந்து அபாரம் : அமெரிக்காவை வீழ்த்தி நாக் அவுட்டிற்கு முன்னேறியது இந்தியா !

Uber கோப்பை இறுதி போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா 4-1 கணக்கில் நாக் அவுட்டிற்கு முன்னேறியது.

#BWF_Uber_Cup போட்டியில் PV.சிந்து அபாரம் : அமெரிக்காவை வீழ்த்தி நாக் அவுட்டிற்கு முன்னேறியது இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த செவ்வாய்கிழமை அன்று நடந்த குரூப் D ஆட்டத்தில் இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி உபெர் கோப்பை இறுதிப் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக்கில் நடைபெற்ற, ‘BWF Uber Cup 2022’ தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த குரூப் டி என்கவுன்டரில், World No 7 வீராங்கனையான பி.வி.சிந்து, ஜென்னி கய்க்கு எதிரான ஆட்டத்தில் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது நடந்த மோதலில், மகளிர் இரட்டையர் ஜோடியான தனிஷா க்ராஸ்டோ மற்றும் ட்ரீசா ஜாலி ஜோடி 21-19, 21-10 என்ற செட் கணக்கில் பிரான்செஸ்கா கார்பெட் மற்றும் அலிசன் லீ ஜோடியை வீழ்த்தியது.

மூன்றாவது போட்டியில் எஸ்தர் ஷியுடன் ஆகர்ஷி காஷ்யப் மோதினார். இதில் அமெரிக்க ஷட்லர் 34 நிமிடங்களில் 18-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பின்னர், ஸ்ருதி மிஸ்ரா மற்றும் சிம்ரன் சிங்கி ஜோடி 12-21 என்ற கணக்கில் லாரன் லாம் மற்றும் கோடி டாங் லீயிடம் தோல்வியைத் தழுவியது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய ஜோடி, இரண்டாவது கேமை 21-17 என வென்று மீண்டும் களமிறங்கியது. ஆனால் மூன்றாவது கேமில் 21-13 என்ற கணக்கில் அமெரிக்க ஜோடி வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில், அஷ்மிதா சாலிஹா, நடாலி சியை எதிர்கொண்டார். இந்திய வீராங்கனை 31 நிமிடங்களில் 21-18, 21-13 என்ற செட் கணக்கில் எதிரணியை வீழ்த்தினார். முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளுடன், இந்தியா தனது காலிறுதி இடத்தை உறுதி செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories