விளையாட்டு

வீழ்ந்து எழுந்த மும்பை இந்தியன்ஸ்.. ரோகித் அதிரடி: கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியை கடைசி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்திருக்கிறது.

வீழ்ந்து எழுந்த மும்பை இந்தியன்ஸ்.. ரோகித் அதிரடி:  கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியை கடைசி இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்திருக்கிறது. டிம் டேவிட் மற்றும் டேனியல் சாம்ஸூமே இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தனர்.

மும்பை அணியே முதலில் பேட்டிங்க் செய்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை அடித்திருந்தது. முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் மும்பை அணி 63 ரன்களை எடுத்திருந்தது. ரன்ரேட் 10 க்கும் மேல் இருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா பவர்ப்ளேயில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். 28 பந்துகளில் 43 ரன்களை அடித்திருந்தார்.

இந்த சீசனில் ரோஹித் சர்மாவின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இதுதான் என சொல்லலாம். எந்த தடுமாற்றமும் இல்லாமல் 100% துல்லியத்தன்மையோடு ஷாட்களை ஆடியிருந்தார். அல்சாரி ஜோசப்பின் ஒரே ஓவரில் 16 ரன்களை அடித்தது, ஷமியின் பந்தில் ஃபைன் லெக்கில் மடக்கி இலகுவாக சிக்சரை அடித்தது போன்றவை இந்த இன்னிங்ஸின் ஹைலைட்டான அம்சங்கள். ரோஹித் சர்மா க்ரீஸில் நிற்கும் வரை மும்பை அணியின் ரன்ரேட் வேக வேகமாக உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால், அவர் அவுட் ஆன பிறகு வேகம் குறைந்து ஆட்டம் குஜராத்தின் கட்டுக்குள் வந்தது. 7-15 இந்த மிடில் ஓவர்களில் மும்பை அணியின் ரன்ரேட் 6 ஐ சுற்றி மட்டுமே இருந்தது. 4 விக்கெட்டுகளையும் இந்த ஓவர்களில் இழந்திருந்தனர்.

தட்டுத்தடுமாறிய மும்பையை மீண்டும் தூக்கி நிறுத்தியது டிம் டேவிட்தான். கடைசி 5 ஓவர்கள் மிகச்சிறப்பாக அடித்து வெளுத்தார். ஷமி, ஃபெர்குசன் போன்றோரின் டெலிவரிக்களை நின்ற இடத்தில் நின்றே அவர்களின் தலைக்கு மேலேயே சிக்சர் ஆக்கினார். 21 பந்துகளில் 44 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 210 ஆக இருந்தது. டிம் டேவிட்டின் அதிரடியால் மும்பை அணியின் நன்றாக கூடி 177 ரன்களை எட்டியது.

வீழ்ந்து எழுந்த மும்பை இந்தியன்ஸ்.. ரோகித் அதிரடி:  கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

குஜராத் அணிக்கு டார்கெட் 178. குஜராத் அணியின் சேஸிங்கில் ஹைலைட்டான விஷயம் டேனியல் சாம்ஸ் வீசிய அந்த கடைசி ஓவர்தான். கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டியிருந்தது. க்ரீஸில் மில்லர், திவேதியா ஆகியோர் நிற்க பெவிலியனில் ரஷீத்கான் இருந்தார். மூவருமே அபாயகரமானவர்கள். இந்த சீசனிலேயே இதற்கு முன்பே பல அசாத்தியமான கடைசி ஓவர் முடிவுகளை கொடுத்திருக்கின்றனர்.

இப்படியான மூவருக்கு எதிராக 9 ரன்களை டிஃபண்ட் செய்வது ரொம்பவே கடினம். ஆனால், அந்த கடினமான டாஸ்க்கை டேனியல் சாம்ஸ் சிறப்பாக செய்துகாட்டினார். இந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஓவர் முழுவதுமே ஸ்லோயர் ஒன்களை மட்டுமே வீசியிருந்தார். எல்லா பந்துகளும் 110-120 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசப்பட்டிருந்தது. வேகம் குறைந்த இந்த பந்துகளை அடிக்க முடியாமல் மூவருமே திணறினர். மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டிம் டேவிட்டாகட்டும் டேனியல் சாம்ஸாகட்டும் இருவருமே இந்த சீசனின் தொடக்கத்தில் கடுமையாக சொதப்பியிருந்தனர். டிம் டேவிட் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக அடிக்காததால் பென்ச்சில் வைக்கப்பட்டார். டேனியல் சாம்ஸ் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். இவரது ஒரே ஓவரில் பேட் கம்மின்ஸ் 35 ரன்களை அடித்து வெளுத்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு இவரும் ட்ராப் செய்யப்பட்டார்.

இருவருமே மிகப்பெரிய சரிவை சந்தித்தனர். ஆனால், அப்படியே சரிந்து கிடக்கவில்லை. இரண்டாவதாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதை இருவருமே சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ரன்னே அடிக்காமல் சொதப்பிய டேவிட் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து வெளுக்கிறார். ஓவருக்கு 35 ரன்களை கொடுத்த சாம்ஸ் கடைசி ஓவரில் 9 ரன்களை டிஃபண்ட் செய்கிறார். வீழ்ந்து எழுந்தவர்களால் மும்பை அணியும் பழையபடிக்கு இப்போது எழ தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories