விளையாட்டு

IPL-ல் முதல் முறையாக மோதும் GT vs MI.. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா குஜராத் டைட்டன்ஸ்?

நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

IPL-ல் முதல் முறையாக மோதும்
GT vs MI.. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா குஜராத் டைட்டன்ஸ்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்.

இடம்: பிராபோர்ன், மும்பை.

நேருக்கு நேர்: இதுவரை இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மோதவில்லை. இதுதான் முதல் போட்டி.

சிறந்த பேட்டர்: குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா: 9 போட்டிகளில் 309 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ்: திலக் வர்மா: 9 போட்டிகளில் 307 ரன்கள்

சிறந்த பௌலர்: குஜராத் டைட்டன்ஸ்: முகமது ஷமி: 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

மும்பை இந்தியன்ஸ்: டேனியல் சாம்ஸ்: 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோற்றிருக்கிறது. மொத்தம் 16 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது அந்த அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். பிராபோர்ன் மைதானத்தில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியிருக்கும் குஜராத் டைட்டன்ஸ், அந்த இரண்டிலும் வென்றிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியோ நேரெதிராக புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கிறது. விளையாடிய 9 போட்டிகளில் எட்டில் தோற்றிருக்கிறது அந்த அணி. அதனால், வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் எந்த அணிகளும் சந்தித்திடாத வகையில் முதல் எட்டு போட்டிகளையும் தோற்று தடுமாறியது அந்த அணி. பிராபோர்ன் மைதானத்தில் விளையாடிய 2 போடிகளிலும் குஜராத் வென்றிருக்க, அங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

IPL-ல் முதல் முறையாக மோதும்
GT vs MI.. பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா குஜராத் டைட்டன்ஸ்?

கடைசிப் போட்டியில்: தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியாக பெற்றுவந்த குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக தோல்வியடைந்தது. பகல் இரவு போட்டியில் முதல் முறையாக டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்தது. டிஒய் பாடில் ஸ்டேடியத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. அதை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் ஷிகர் தவான், பனுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நான்கு ஓவர்கள் மிச்சம் வைத்து அந்த ஸ்கோரை எட்டியது. குஜராத் பௌலர்களால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை.

முகமது ஷமி, லாகி ஃபெர்குசன் ஆகியோர் மட்டும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர் வெற்றிகளுக்குப் பிறகு குஜராத் தோல்வியைச் சந்திக்க, மும்பை இந்தியன்ஸ் அணியோ தொடர் தோல்விகளுக்குப் பிறகு கடைசி ஆட்டத்தில் தான் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ஹிரிதிக் ஷொகீன், ரைலி மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அந்த இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ், 4 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டியது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மாற்றங்கள்: இரண்டு அணிகளிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

குஜராத் டைட்டன்ஸ்: ரித்திமான் சஹா (WK), சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், ராகுல் தெவேதியா, ரஷீத் கான், பிரதீப் சங்வான், லாகி ஃபெர்குசன், அல்சாரி ஜோசஃப், முகமது ஷமி.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா (C), இஷன் கிஷன் (WK), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கரண் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், ஹிரிதிக் ஷொகீன், குமார் கார்த்திகேய சிங், ரைலி மெரிடித், ஜஸ்ப்ரித் பும்ரா.

banner

Related Stories

Related Stories