விளையாட்டு

#IPL2022 வெற்றியை எதிர்நோக்கி களம் காண்கிறது மும்பை இந்தியன்ஸ் : இன்றைய ஆட்டத்தில் லக்னோ - மும்பை மோதல்!

7 போட்டிகளில் 4 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பதிவு செய்திருக்கும் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி

#IPL2022 வெற்றியை எதிர்நோக்கி களம் காண்கிறது மும்பை இந்தியன்ஸ் : இன்றைய ஆட்டத்தில் லக்னோ - மும்பை மோதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

போட்டி: லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

இடம்: வான்கடே, மும்பை

நேருக்கு நேர்: போட்டிகள் - 1

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் வெற்றி - 1

மும்பை இந்தியன்ஸ் வெற்ற - 0

சிறந்த பேட்டர்:

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் - கே.எல்.ராகுல்: 7 போட்டிகளில் 265 ரன்கள்

மும்பை இந்தியன்ஸ் - திலக் வர்மா: 7 போட்டிகளில் 234 ரன்கள்

சிறந்த பௌலர்:

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் - அவேஷ் கான்: 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்

மும்பை இந்தியன்ஸ் - ஜெய்தேவ் உனத்கட்: 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பதிவு செய்திருக்கும் லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் பெற்றிருக்கிறது. முதல் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருந்தவர்கள், அடுத்த 3 போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாக விளையாடி, முதல் 7 போட்டிகளையுமே தோற்றிருக்கிறது. சச்சினின் பிறந்த நாளான இன்று முதல் வெற்றியை எதிர்நோக்கி களம் காண்கிறது மும்பை இந்தியன்ஸ்.

கடைசிப் போட்டியில்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ். 181 ரன்களை சேஸ் செய்த அந்த அணியால் 20 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ரவி பிஷ்னாய், குவின்டன் டி காக் ஆகியோர் எதிர்பாராமல் சொதப்பியது அந்த அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸோ, முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என்று நினைக்கப்பட, கடைசிப் பந்தில் தோல்வியடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான அந்தப் போட்டியில் உனத்கட் வீசிய கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி மும்பைக்கு ஏழாவது தோல்வியைப் பரிசளித்தார் மஹேந்திர சிங் தோனி.

மாற்றங்கள்: மனிஷ் பாண்டேவின் சொதப்பல் தொடர்வதால், அவர் இந்தப் போட்டியில் வெளியே அமரவைக்கப்படலாம். ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் அணியில் இடம்பெறாத அவர், பெங்களூருக்கு எதிரான கடந்த போட்டியிலும் 6 ரன்களே அடித்திருந்தார். அதனால், அவருக்குப் பதில் கே.கௌதம் களமிறக்கப்படலாம். கௌதம் வந்தால், லோயர் மிடில் ஆர்டர் பலமடைவதோடு, ஆப் ஸ்பின் ஆப்ஷனும் கிடைத்துவிடும். பவர்பிளேவில் இஷன் கிஷனுக்கு எதிராக அவரைப் பயன்படுத்த முடியும். இல்லையெனில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மனன் வோரா களமிறக்கப்படலாம். மும்பை அணி கடந்த போட்டியில் சொதப்பியிருந்தாலும் ஓரளவு வீரர்கள் செட் ஆகியிருக்கிறார்கள். அதனால், மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை கூடுதல் ஸ்பின்னரோடு களமிறங்க நினைத்தால், உனத்கட் இடத்தில் முருகன் அஷ்வின் விளையாடலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம்:

லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ்: கே.எல்.ராகுல் (C), குவின்டன் டி காக் (WK), ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், குருனால் பாண்டியா, கே.கௌதம், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னாய், அவேஷ் கான்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா (C), இஷன் கிஷன் (WK), டிவால்ட் பிரெவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கரண் பொல்லார்ட், ஹிரித்திக் ஷொகீன், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ரைலி மெரிடித், ஜஸ்ப்ரித் பும்ரா

banner

Related Stories

Related Stories