விளையாட்டு

“இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் - BCCI அதிரடி ஆக்‌ஷன்” : பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விருத்திமான் சாஹாவை மிரட்டிய பத்திரிகையாளருக்கு, போட்டிகளைக் காண பிசிசிஐ தடை வித்துள்ளது.

“இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் -  BCCI அதிரடி ஆக்‌ஷன்” : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்தை பிடிக்க இரண்டு வீரர்களுக்கு இடையே கடும் போட்டிகள் இருந்து வருகிறது. இதில் ஒருவர் ரிஷப் பண்ட். மற்றொருவர் விருத்திமான் சாஹா.

இவர் ரிஷப் பண்ட் பங்கேற்க முடியாத ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர் இந்தியாவிற்காக 40 டெல்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றிக்குப் பேட்டி தராததால், சாஹாவை பிரபல கிரிக்கெட் செய்தி தொகுப்பாளர் ஒருவர் பகிரங்கமாக அவரின் வாட்ஸ் ஆப்பில் மிரட்டியுள்ளார். இது குறித்து சாஹா தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்திய கிரிக்கெட் அணிக்காக நான் அளித்த பங்களிப்புக்காக பத்திரிகையாளர் ஒருவரிடமிருந்து நான் பெற்றது இதுதான்” எனத் தெரிவித்திருந்தார்.

இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து பத்திரிகையாளர் போரியா மஜும்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு வலியுறுத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பிசிசிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து பத்திரிகையாளர் போரியா மஜும்தார் இனி இந்தியாவில் உள்ள கிரிக்கெட் போட்டிகளைக் காண 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இனி போரியா மஜும்தாரை அனுமதிக்கக் கூடாது. மேலும் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்கான ஊடக அங்கிகார அட்டையை வழங்கக் கூடாது. வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளைக் காணவும் அவருக்குத் தடை விதிக்க ஐ.சி.சி-க்கு கடிதம் எழுதியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories