விளையாட்டு

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் ரெஃப்ரியாக இந்தியப் பெண்மணி.. யார் இவர்? #5in1_Sports

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஐசிசி சர்வதேச மேட்ச் ரெஃப்ரி குழுவில் முதல் பெண்மணியான இந்தியாவின் ஜிஎஸ் லட்சுமி, மேட்ச் ரெஃப்ரியாக செயல்பட உள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் ரெஃப்ரியாக இந்தியப் பெண்மணி.. யார் இவர்? #5in1_Sports
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி!

9-வது ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.இதில் பங்கேற்கும் 15 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஜிம்பாப்வே, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ‘சி’ பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, தென் கொரியா, உருகுவே, ஆஸ்திரியா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, இந்தியா, மலேசியா, வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் நாளை வேல்சையும், 3-ந் தேதி ஜெர்மனியையும், 5-ந் தேதி மலேசியாவையும் எதிர்கொள்கிறது.

2. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் ரெஃப்ரியாக இந்தியப் பெண்மணி!

வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஐசிசி சர்வதேச மேட்ச் ரெஃப்ரி குழுவில் முதல் பெண்மணியான இந்தியாவின் ஜிஎஸ் லட்சுமி, மேட்ச் ரெஃப்ரியாக செயல்பட உள்ளார். இதற்கு முன்னதாக 2020 டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் 2 போட்டியில் மேட்ச் ரெஃப்ரியாக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமையையும் லட்சுமி பெற்றுள்ளார்.

3. அதிக வேகத்தில் பறக்கும் பந்து!

FIFA உலகக் கோப்பைக்காக அடிடாஸ் உருவாக்கிய 14வது பந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கத்தாரில் நடக்கவிருக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பயன்படுத்த உள்ள இப்பந்து மற்ற உலகக் கோப்பை பந்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் பறக்கும் விளையாட்டை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. 32 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

லாஹூரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 349 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங்கை நிறைவு செய்தது.மேலும் நேற்றைய போட்டியில் சதமடித்த பாபர் அசாம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானின் 32 ஆண்டுகால சாதனையை பாபர் அசாம் நேற்று முறியடித்தார்.

5. சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது ஏன்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது. போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்கள் போதிய அளவில் தரப்படவில்லை. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் நினைத்தபடி பந்தை திருப்ப முடியவில்லை. ஏனென்றால் மைதானத்தில் ஈரத்தன்மை நயாகரா நீர் வீழ்ச்சி போல் இருந்தது என்று மைதானத்தின் மேற்பரப்பை நயாகரா வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories