விளையாட்டு

சாஹலை கிண்டல் செய்த RR பயிற்சியாளர்... வைரலாகும் வீடியோ! #5in1_Sports

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருக்கும் போது அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சாஹலை கிண்டல் செய்தார்.

சாஹலை கிண்டல் செய்த RR பயிற்சியாளர்... வைரலாகும் வீடியோ! #5in1_Sports
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. சாஹலை கிண்டல் செய்த RR பயிற்சியாளர்!

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. ராஜஸ்தான் அணியில் 3 விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தினார். ராஜஸ்தான் அணிக்கான முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாஹல் அசத்தி உள்ளார்.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருக்கும் போது அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சாஹலை கிண்டல் செய்திருப்பார். அந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் பயிற்சியாளர் சஹாலை பார்த்து 10 ரூபாய்க்கு பெப்சி யூசி பாய் செக்ஸி என கிண்டலாக பேசியிருப்பார். அதற்கு சாஹல் சிரித்துக்கொண்டே செல்வார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2. வார்னே 700-வது டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய மைதானத்தில் நினைவஞ்சலி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்ற போது கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் தனியார் விமானத்தில் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் இறுதிசடங்குகளை செய்தனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தான் வார்னே தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலவசமாக 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தேவை அதிகமாக இருந்ததால் மேலும் 15 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள், வார்னே குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

சாஹலை கிண்டல் செய்த RR பயிற்சியாளர்... வைரலாகும் வீடியோ! #5in1_Sports

3. தவறுகளை சரி செய்வோம்!

நேற்று நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 61 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தியது. இப்போட்டி முடிந்த பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், "நாங்கள் தொடங்கிய விதம் நன்றாக இருந்தது. இதற்குமுன் நடந்த போட்டிகளை போலவே தொடக்கத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், நாங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோ பால்களை தவிர்த்திருக்கலாம். ஒரு நோ பால் என்பது கூடுதல் ரன் மட்டுமல்ல, அது கூடுதல் பந்தையும் கொடுக்கும்.இந்த ஆட்டம் எங்களின் பக்கம் வரவில்லை. ராஜஸ்தான் அணியை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.நாங்கள் தவறுகளை சரி செய்து, அடுத்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

4. கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் அணி மோதியது. இதில் ராஜஸ்தான் அணி 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 55 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 149 ரன்கள் எடுத்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐதராபாத் தரப்பில் மார்க்ராம் 57 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாஹலை கிண்டல் செய்த RR பயிற்சியாளர்... வைரலாகும் வீடியோ! #5in1_Sports

5. அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதல்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நாளை மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

banner

Related Stories

Related Stories