விளையாட்டு

#5in1_Sports |ரிஷப் பண்ட் பற்றி ஷேன் வாட்சன் கூறியது என்ன? CSK ஆட்டத்தில் மொயீன் அலி பங்கேற்பதில் சிரமம்!

ஐ.பி.எல். முதல் கால்பந்து வரையிலான விளையாட்டுச் செய்திகளின் தொகுப்பு.

#5in1_Sports |ரிஷப் பண்ட் பற்றி ஷேன் வாட்சன் கூறியது என்ன? CSK ஆட்டத்தில் மொயீன் அலி பங்கேற்பதில் சிரமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ரிக்கி பாண்டிங்கின் அனுபவத்தில் இருந்து ரிஷப் பண்ட் மட்டுமே கற்றுகொள்ள முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிர்ச்சியாளருமான ஷேன் வாட்சன் கூறியுள்ளார். வரும் 26ஆம் தேதி நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் லீக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஷேன் வாட்சன் “24 வயதில் அவரால் என்ன என்ன சாதனைகளை படைக்க முடியும் என்று பார்த்தல் அது வியக்கும் அளவுக்கு இருக்கிறது.” என்று கூறினார்.

#5in1_Sports |ரிஷப் பண்ட் பற்றி ஷேன் வாட்சன் கூறியது என்ன? CSK ஆட்டத்தில் மொயீன் அலி பங்கேற்பதில் சிரமம்!

2. ஏப்ரல் 1ம் தேதி கத்தாரில் நடைபெறும் டிராவிற்கான நடைமுறையை ஃபிஃபா வெளியிட்டுள்ளது. போர் மற்றும் சுகாதார பிரச்னைகள் காரணமாக டிராவில் உள்ள 32 அணிகளில் 29 அணிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. மீதமுள்ள மூன்று இடங்கள் ஜூன் மாதத்தில் தீர்மானிக்கப்படும், ஒன்று உக்ரைனை உள்ளடக்கிய போட்டிகளில் ஐரோப்பாவில் இருந்தும் மற்றவை கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆஃப்களிலிருந்தும் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.

#5in1_Sports |ரிஷப் பண்ட் பற்றி ஷேன் வாட்சன் கூறியது என்ன? CSK ஆட்டத்தில் மொயீன் அலி பங்கேற்பதில் சிரமம்!

போட்டியை நடத்தும் நாடு தற்போது 52வது இடத்தில் உள்ளது. இது ஏற்கெனவே தகுதி பெற்ற அணிகளில் மிகக் குறைந்த அணியாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழுக்கள் வரையப்பட்டபோது 65வது இடத்தில் இருந்த 2018 போட்டிகளை நடத்திய ரஷ்யாவை விட இது அதிகமாகும். மேலும் உக்ரைனை ஆக்கிரமித்ததற்கு தண்டனையாக ஃபிஃபா இந்த மாதம் ரஷ்யாவை தகுதிச் சுற்றில் இருந்து நீக்கியது என்பது குறிப்பிடதக்கது.

3. மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் இடையே அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் FA கோப்பை அரையிறுதியை வெம்ப்லியில் இருந்து மாற்றுமாறு கால்பந்து சங்கத்தை (FA) கேட்டுக் கொண்டனர். மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் ஈஸ்டர் வார இறுதியில் சந்திக்க இருக்கிறது.

ஆனால் ஏப்ரல் 16-17 தேதிகளில் பொறியியல் வேலைகள் திட்டமிடப்பட்டுள்ளதால், மான்செஸ்டர் மற்றும் மெர்சிசைடில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில்கள் இருக்காது என்பதால் போட்டியை காண ரசிகர்கள் வருவது சிரமம் என்பதால் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலளித்த கால்பந்து சங்கம் "நெட்வொர்க் ரயில் மற்றும் நேஷனல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டையும் நாங்கள் தொடர்ந்து சரி செய்து வருகிறோம். இதனால் இரு அணிகளின் ஆதரவாளர்களும் கூடுமானவரை குறைந்த இடையூறுகளுடன், பயணிக்க முடியும்," என்று கூறியுள்ளது.

4. நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்களுக்கான உலகக்கோப்பை தொடரில், இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா மற்றும் யஷ்திகா பாத்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் சதமடித்த ஸ்மிரிதி மந்தனா 10வது இடத்துக்கும், ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக அடுத்த அடுத்த போட்டிகளில் அரைசதம் அடித்த யஷ்திகா பாத்தியா 39வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இத்தொடரில் பெரிதும் சோபிக்காத இந்தியா அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

5. மார்ச் 26ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீச்சை நடத்த உள்ளது. மும்பையில் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு விசா சம்மந்தமாக சிக்கல் தொடர்ந்து வருவதால், மொயீன் அலி சென்னை அணியுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories