விளையாட்டு

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த KKR வீரர்... பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..! #SportsUpdates

"பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறியது கண்டிப்பாக கடினமான முடிவுதான்" என்று ராகுல் தெரிவித்தார்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த KKR வீரர்... பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..! #SportsUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ஐதராபாத் அணி முதல்முறையாக சாம்பியன்!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஐதராபாத் எப்.சி. அணிகள் மல்லுக்கட்டின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் நெருங்கி வந்தார்களே தவிர யாரும் கோல் போடவில்லை. 39-வது நிமிடத்தில் கேரள வீரர் அல்வரோ வாஸ்கியூஸ் அடித்த ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது. பிற்பாதியில் கேரள வீரர் ராகுல் கே.பி. 68-வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

இதையடுத்து கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்ட 30 நிமிடங்களில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கேரளாவின் முதல் 4 வாய்ப்புகளில் 3-ஐ ஐதராபாத் கோல் கீப்பர் லட்சுமிகாந்த் கட்டிமணி, பாய்ந்து விழுந்து பிரமாதமாக தடுத்து ஹீரோவாக ஜொலித்தார். அதேசமயம் ஐதராபாத் தனது முதல் 4 வாய்ப்புகளில் 3-ஐ கோலாக மாற்றி அசத்தியது. திரில்லிங்கான பெனால்டி ஷூட் அவுட் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

2. பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறியது கடினமான முடிவு - ராகுல்

ஐபிஎல்லில் 2018லிருந்து கடந்த 4 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த கே.எல்.ராகுல், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் உள்ளார். இவ்வாறு மிகச்சிறப்பாக ஆடிவந்த கே.எல்.ராகுல், ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகினார். இதையடுத்து அவரை ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, அவரை கேப்டனாகவும் நியமித்தது. பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறியது குறித்து பேசிய கே.எல்.ராகுல், 4 ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக ஆடினேன். அது சிறந்த அனுபவம். வேறு அணிக்காக ஆட விரும்பினேன்; அவ்வளவுதான். பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறியது கண்டிப்பாக கடினமான முடிவுதான் என்று ராகுல் தெரிவித்தார்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த KKR வீரர்... பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..! #SportsUpdates

3. காதலியைக் கரம்பிடித்த டிம் செளதி!

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி, தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 33 வயதான செளதி, நியூசிலாந்து அணிக்காக 2008 முதல் 85 டெஸ்டுகள், 143 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் டிம் செளதியை ரூ. 1.5 கோடிக்கு கேகேஆர் அணி தேர்வு செய்தது. பிரயா ஃபேஹியை நீண்டகாலமாகக் காதலித்து வருகிறார். இருவருக்கும் இண்டி, ஸ்லோன் என இரு பெண் குழந்தைகள் உண்டு. 2017-ல் இண்டியும் 2019-ல் ஸ்லோனும் பிறந்தார்கள். இந்நிலையில் பிரயா ஃபேஹியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் செளதி. திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த KKR வீரர்... பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..! #SportsUpdates

4. அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகள்

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஹேமில்டனில் நடைபெற்ற ஆட்டம் மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. டாட்டின் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் நிடா டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எளிதான இலக்கை நன்கு விரட்டிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் 2009-க்குப் பிறகு 18 தோல்விகளைத் தொடர்ச்சியாக அடைந்து, தற்போது முதல் வெற்றியை அடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. புள்ளிகள் பட்டியலில் 2 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கடைசி இடத்திலும் மே.இ. தீவுகள் அணி 6 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. இதனால் இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ள இந்தியாவும் இங்கிலாந்தும் மே.இ. தீவுகளைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த KKR வீரர்... பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி..! #SportsUpdates

5. இந்திய அணி வெற்றி!

9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில், நடந்த ஆட்டத்தில் மீண்டும் இந்தியா -அர்ஜென்டினா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

banner

Related Stories

Related Stories