விளையாட்டு

IPL தொடரில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்.. TOP 5 விளையாட்டு துளிகள்!

ஐ.பி.எல் தொரில் இருந்து லக்னோ அணி வீரர் மார்க் வுட் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL  தொடரில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்.. TOP 5 விளையாட்டு துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.பி.எல் தொரில் இருந்து வெளியேறும் மார்க் வுட்!

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.இதற்கிடையில் இந்தாண்டு லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் புதிதாக களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.இந்நிலையில் லக்னோ அணியின் முன்னணி பந்துவீச்சாளரான இங்கிலாந்தை சேர்ந்த மார்க் வுட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

IPL  தொடரில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்.. TOP 5 விளையாட்டு துளிகள்!

அரை இறுதி போட்டியில் போதும் நடால்-அல்காரஸ்!

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6,5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை போராடி வீழ்த்தினார்.மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை தோற்கடித்தார்.இதையடுத்து அரை இறுதி போட்டியில் நடால்-அல்காரஸ் மோதுகின்றனர்.

IPL  தொடரில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்.. TOP 5 விளையாட்டு துளிகள்!

38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேசம்!

வங்காளதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இந்நிலையில், இரு அணிகளும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் நகரில் . இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணியினர் அதிரடியாக விளையாடினர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.

பின்னர் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. 48.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதையடுத்து வங்காள தேச அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL  தொடரில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்.. TOP 5 விளையாட்டு துளிகள்!

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்:அரையிறுதியில் லக்சயாசென் !

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடர்ந்து முன்னேறிவருகிறார்.காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லு குவாங்குடன் ,லக்சயா சென் மோதுவதாக இருந்தது. ஆனால், சீன வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் லக்சயா சென் போட்டியின்றி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் மலேசியாவின் லீ ஜி ஜியா- ஜப்பானின் கென்டோ மொமோட்டா ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரருடன், அரையிறுதியில் லக்சயா சென் மோதுவார்.

IPL  தொடரில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்.. TOP 5 விளையாட்டு துளிகள்!

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி!

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடியினர் 14-21, 22-20, 21-15 என்ற செட் கணக்கில், தரநிலையில் 2-வது இடம் பெற்றிருந்த தென்கொரியாவின் லீ சோஹீ- ஷின் சியங்சான் இணைக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். 2-வது செட்டின் போது தோல்வியின் விளிம்பில் இருந்த ஜாலி- காயத்ரி ஜோடியினர் எதிராளிகளின் இரு 'மேட்ச் பாயிண்ட்' வாய்ப்புகளில் இருந்து தங்களை தற்காத்து கொண்டதுடன் அதன் பிறகு சுதாரித்து எழுச்சி பெற்று வெற்றியை வசப்படுத்தினர்.

banner

Related Stories

Related Stories