விளையாட்டு

ICC விருதை தட்டிச் சென்ற இந்திய அணியின் இளம் வீரர்.. யார் இந்த ஸ்ரேயாஸ் ?

ஐ.சி.சி வழங்கும் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இளம் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தட்டி சென்றார்.

ICC விருதை தட்டிச் சென்ற இந்திய அணியின் இளம் வீரர்.. யார் இந்த ஸ்ரேயாஸ் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.சி.சி சார்பில் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாதம் தோறும் விருது வழங்கப்படும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி-யின் சிறந்த வீரர் விருதை இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தட்டி சென்றார்.

ஐ.பி.எல் தொடர் மூலம் சர்வதேச அரங்கிற்கு தனது முகத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ், 2017 நவம்பரில் டி20 தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமானார். இடையில், காயத்தால் அணியில் இடம்பெறமுடியாமல் போன ஸ்ரேயாஸ்க்கு தற்போது அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அவர், அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் உடனான கடைசி டி20-யில் 80 ரன்கள் விளாசிய ஸ்ரேயாஸ், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டியிலும் அரைசதம் கடந்த அவர் 204 ரன்களை பதிவு செய்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

ICC விருதை தட்டிச் சென்ற இந்திய அணியின் இளம் வீரர்.. யார் இந்த ஸ்ரேயாஸ் ?

அதேபோல், இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தடுமாற்றத்தில் இருந்த இந்திய அணியை இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து வலுவான சேசிங்கிற்கு வித்திட்டு வெற்றி வாகை சூட இவரும் ஒரு காரணமானார்.

ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர், நடப்பு ஆண்டு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸின் இந்த சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ஐசிசி வழங்கியுள்ளது. இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்து ஆல் ரவுண்டர் Amelia Kerr வென்றார்.

banner

Related Stories

Related Stories