விளையாட்டு

IND vs PAK T20: கண்ணிமைக்கும் நேரத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்ஸ்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள். இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு டிக்கெட் பெற ரசிகர்கள் ஆர்வம்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது.

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதுமே தனி எதிர்பார்ப்பு உண்டு. பரம எதிரிகள் என உலக கிரிக்கெட் அரங்கில் பார்க்கப்படும் இவ்விரு அணிகளும் ஐசிசியால் நடத்தப்படும் தொடரில் மட்டுமே எதிரெதிரே விளையாடி வருகின்றன.

இந்நிலையில், ஐசிசியால் நடத்தப்படும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக், நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகள் என மொத்தம் 45 போட்டிகள் அரங்கேறவுள்ள உலகக்கோப்பை போட்டி குறித்தான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

IND vs PAK T20: கண்ணிமைக்கும் நேரத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்ஸ்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி தொடங்கியது. லீக், நாக் அவுட் போட்டிகள் உள்பட இறுதிப்போட்டி வரை அனைத்து போட்டிகளுக்குமான டிக்கெட்டை ரசிகர்கள் t20worldcup.com என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கூறியதையடுத்து, ரசிகர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற தொடங்கினர்.

இதில், கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 23 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை தொடங்கியவுடனேயே ரசிகர்கள் பட்டாளம் ஆக்கிரமித்து, டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வராலற்றை படைத்தது.

இதனிடையே, நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, புதிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களம் காணவுள்ள நிலையில், இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories