விளையாட்டு

4 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. யார் அந்த வீரர்கள்: என்ன சொல்கிறது BCCI!

இந்திய கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. யார் அந்த வீரர்கள்: என்ன சொல்கிறது BCCI!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டர். இதையடுத்து இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுடன் ஒருநாள் மற்றும் டி30 தொடர் விளையாட உள்ளது.

இந்த தொடர் பிப்.6ம் தேதி துவங்க உள்ளது. மேலும் இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பெயர்களும் அண்மையில் வெளியானது. அதேபோல் கேப்டனாக ரோஹித் ஷர்மா தலைமையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 4 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனி ஆகிய நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அதேபோல் மூன்று நிர்வாகிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது அகமதாபாத்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நான்கு வீரர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது மேலும் தொற்று பாதித்த வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories