விளையாட்டு

விளையாட்டின் ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் தடகள தங்க மகன்; இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்த நீரஜ்!

விளையாட்டு உலகின் தலைசிறந்த விருதுக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய தடகள வீரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டின் ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் தடகள தங்க மகன்; இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்த நீரஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆண்டுதோறும் விளையாட்டு அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைளுக்கு லாரியஸ் விருதுகள் 7 வகைகளில் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் விளையாட்டு துறையை சார்ந்த தலைசிறந்த 1300 பத்திரிக்கையாளர்கள் கொண்ட குழு மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, அதன் பிறகு ஒவ்வொரு வகை பிரிவிலும் சிறந்த வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.

7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்களை 71 விளையாட்டு ஜாம்பவான்கள் சேர்ந்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, ஏப்ரல் மாதம் விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு லாரியஸ் விருதுகளில் ஒன்றான WORLD BREAKTHROUGH OF THE YEAR விருதுக்கு 23 வயதான இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளம் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற வரலாறு படைத்ததன் அடிப்படையில் நீரஜ் பெயர் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நீரஜ் உள்பட உலக அளவில் 6 வீரர்கள் இந்த பிரிவு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். லாரியஸ் விருதுக்கு ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இப்படி இருக்கையில், 3வது இந்தியராக லாரியஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ராவின் பெயர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆகவே இம்முறை நீரஜ் சோப்ரா இந்த விருதை வென்றால் இந்தியாவுக்கு மேலும் பெருமையை சேர்க்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

banner

Related Stories

Related Stories