விளையாட்டு

"முழுநேர கேப்டனாக பணி தொடர காத்திருக்க முடியவில்லை" - லைக்ஸ்களை அள்ளும் ஹிட் மேனின் இன்ஸ்டா பதிவு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை மிகவும் எதிர்பார்த்து இருப்பதாகவும் இந்திய அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா பதிவிட்டுள்ளார்.

"முழுநேர கேப்டனாக பணி தொடர காத்திருக்க முடியவில்லை" - லைக்ஸ்களை அள்ளும் ஹிட் மேனின் இன்ஸ்டா பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளிடையே முதல் ஒருநாள் போட்டி அஹமதாபாத்தில் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே தொடர் தொடங்குவது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தொடர் தொடங்குவது வரை இனிமேலும் காத்திருக்க முடியாது என பெரிய எதிர்பாப்புடன் இருப்பதாகவும் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ரோஹித் விளையாடவில்லை.

இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரோஹித் சர்மா, சொந்த மண்ணில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடருக்காக தயாராகி வருகிறார்.

தவிர, கோலியின் கேப்டன் பதவி ராஜினாமாவிற்கு பிறகு, இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் பங்கேற்கும் முதல் தொடர் என்பதால், அணியினர் மற்றும் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories