விளையாட்டு

“ரோஹித் கேப்டனாக இருப்பதால், இந்திய கிரிக்கெட்...” : டேரன் சமி சொன்னது என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி.

“ரோஹித் கேப்டனாக இருப்பதால், இந்திய கிரிக்கெட்...” : டேரன் சமி சொன்னது என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாகியிருப்பதால், இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும், டி-20 தொடர் கொல்கத்தாவிலும் நடக்கவிருக்கிறது. பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கும் இத்தொடருக்கு, காயத்தால் ஆடாமலிருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் திரும்புகிறார்.

இத்தொடர் குறித்து டேரன் சமியிடம் கேட்கப்பட்டது. கேப்டன்சி மாற்றம் இந்திய அணியில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேட்டதற்கு, “முந்தைய போட்டிகளில் களத்தில் கோலி மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். அவரை கேப்டன் பதவியிலிருந்து பி.சி.சி.ஐ நீக்கியது அணியைப் பாதிக்காது என்று நினைக்கிறேன். ரோஹித் ஷர்மா ஒரு மிகச் சிறந்த கேப்டன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். உத்வேகம் கொடுக்கக்கூடிய ஒரு கேப்டன். அவர் ஐ.பி.எல் தொடரில் வழிநடத்துவதைப் பார்த்திருக்கிறேன். சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவித்த எம்.எஸ்.தோனி, கௌதம் கம்பீர் ஆகியோர் வரிசையில் அவரும் ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்” என்று கூறினார் சமி.

மேலும், “இந்த கேப்டன்களெல்லாம், தங்கள் அணியினரிடமிருந்து சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கவைக்கும் திறமை வாய்த்தவர்கள். தேவையான முடிவுகளைப் பெற்று கோப்பை வெல்பவர்கள். ரோஹித் கேப்டனாக இருப்பதால், இந்திய கிரிக்கெட் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது” என்றும் கூறினார் அவர்.

இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வாய்ப்பு பற்றிக் கேட்டதற்கு, “பொல்லார்ட் வெற்றிக்காகப் போராடுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் பல காலமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கிருக்கும் சூழ்நிலை நன்கு பரிச்சயம். அதுமட்டுமல்லாமல், சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சில திறமைகளை வெஸ்ட் இண்டீஸ் கண்டெடுத்திருக்கிறது. அதனால், நிச்சயம் இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சவால் அளிக்கும்” என்று கூறினார் டேரன் சமி.

banner

Related Stories

Related Stories