விளையாட்டு

Spot-Fixing : கிரிக்கெட் வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்த ICC - பின்னணி என்ன?

பிரெண்டன் டெய்லர் சூதாட்ட விவகாரத்தில் தொடர்பு கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் கிரிக்கெட் விளையாட ஐசிசி மூன்றரை ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

Spot-Fixing : கிரிக்கெட் வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்த ICC - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர் சூதாட்ட விவகாரத்தில் தொடர்பு கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் கிரிக்கெட் விளையாட ஐசிசி மூன்றரை ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். இவர் ஜிம்பாப்வே அணிக்காக 284 சர்வதேச போட்டிகளில் ஆடி 9,938 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 17 சதங்களும் அடக்கம்.

பிரெண்டன் டெய்லர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார். இவர் சமீபத்தில் தான் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மேட்ச் ஃபிக்சிங்’ விவகாரத்தில் சிக்கியது குறித்து வெளிப்படையாக அறிவித்தார்.

அதில் பிரெண்டன் டெய்லர், “அக்டோபர் 2019 பிற்பகுதியில் இந்திய தொழிலதிபர் ஒருவர் அணுகி, ஜிம்பாப்வேயில் டி20 போட்டிகள் நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிக்க என்னை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த விவாதத்துக்காக எனக்கு ரூ.15 லட்சம் வரை தரப்படும் என்றார்.

சர்வதேச போட்டிகளில் 'ஸ்பாட் பிக்சிங்' செய்யவேண்டும் என்றும், அதற்கு சம்மதிக்காவிட்டால் அந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று அச்சுறுத்தினார்கள்.

அவர்களின் மிரட்டலால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து வேறுவழியில்லாமல், அவர்கள் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

எனக்கு 15,000 டாலர்கள் கொடுத்தார்கள். இந்த தொகை ஸ்பாட் பிக்சிங்கிற்கான முன்தொகை என்றும் வேலை முடிந்ததும் கூடுதலாக 20,000 டாலர்கள் தரப்படும் என்றார்கள்.

இந்த தருணங்களில் அந்த தொழிலதிபர் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினார். ஆனால் நான் கொடுக்கவில்லை. எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை. இந்தக் குற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் நான்கு மாதங்கள் கழித்து புகார் தெரிவித்தேன்.

Spot-Fixing : கிரிக்கெட் வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்த ICC - பின்னணி என்ன?

நான்கு மாதம் என்பது மிக நீண்ட தாமதம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஐசிசியிடம் புகார் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியற்கு காரணம் என் குடும்பத்தின் பாதுகாப்பும் நலனும்தான். அதில் நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே ஐசிசியை அணுகினேன்.” எனத் தெரிவித்தார்.

பிரெண்டன் டெய்லர் சந்தித்துள்ள இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து பல முன்னணி வீரர்கள் பிரெண்டன் டெய்லருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐசிசி, பிரெண்டன் டெய்லர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மூன்றரை ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories