விளையாட்டு

தொடரும் சொதப்பல்கள்.. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக WHITEWASH ஆன இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டு தொடரை இந்திய அணி இழந்தது.

தொடரும் சொதப்பல்கள்.. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக WHITEWASH ஆன இந்திய அணி!
Halden Krog
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோற்றிருக்கிறது. 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்றதன் மூலம் தொடரை 3-0 என வென்று இந்தியாவை வைட் வாஷ் செய்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.

இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றிருந்ததால் இந்த போட்டியில் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ப்ரசித் கிருஷ்ணா, தீபக் சஹார், ஜெயந்த் யாதவ், சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருந்தது. 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உச்சக்கட்ட ஃபார்மிலிருக்கும் ருத்துராஜ் கெய்க்வாட்டை தொடர்ந்து பென்ச்சிலேயே வைத்திருப்பதன் காரணத்தை யாராலுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை.

கே.எல்.ராகுலே டாஸை வென்று முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருந்தார். தென்னாப்பிரிக்க அணி பேட் செய்தது. 49.5 ஓவர்களில் அத்தனை விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டீகாக் சதமடித்திருந்தார். வாண்டர் டஸன் ஒரு அரைசதத்தை அடித்திருந்தார். இருவரும் சேர்ந்து 144 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

தென்னாப்பிரிக்க அணி 280+ ஸ்கோரை எடுத்ததற்கு இந்த கூட்டணியே மிக முக்கிய காரணமாக அமைந்தது. மில்லர் மற்றும் ப்ரெட்டோரியஸ் ஆகியோரிடமிருந்தும் கணிசமான பங்களிப்பு கிடைக்கப்பெற்றிருந்தது. பந்துவீச்சை பொறுத்தவரையில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ராவும் தீபக் சஹாரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். தீபக் சஹார் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசியிருந்தார். டீகாக்கின் விக்கெட்டை வீழ்த்தி பெரிய பார்ட்னர்ஷிப்பை பும்ரா உடைத்திருந்தார்.

தொடரும் சொதப்பல்கள்.. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக WHITEWASH ஆன இந்திய அணி!

இந்திய அணிக்கு டார்கெட் 288. இந்திய அணியால் 283 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதற்குள் அத்தனை விக்கெட்களையும் இழந்திருந்தது. ஓப்பனிங்கில் கேப்டன் கே.எல்.ராகுல் 9 ரன்களில் இங்கிடியின் பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகியிருந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த தவானும் கோலியும் சிறப்பாகவே ஆடியிருந்தனர். இருவரும் அரைசதத்தை கடந்திருந்தனர்.

ஆனால், இருவருமே பொறுப்பை ஏற்றுக்கொண்டு நின்று பெரிய இன்னிங்ஸை ஆடிக்கொடுக்கவில்லை. தவான் 61 ரன்களிலும் கோலி 65 ரன்களிலும் ஆட்டமிழந்திருந்தனர். மிடில் ஆர்டர் வழக்கம்போல சரிய இந்தியா வீழத்தொடங்கியது. ஆனால், திடீரென சர்ப்ரைஸாக தீபக் சஹார் அடித்து வெளுக்க தொடங்கினார். 34 பந்துகளில் 54 ரன்களை எடுத்து போட்டியை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றினார். ஆனால், கடைசியில் போட்டியை முடிக்க முடியாமல் அவுட் ஆகி சொதப்பினார். தீபக் சஹார் அவுட் ஆன போது அணிக்கு 18 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அந்த சமயத்தில் இங்கிடியின் பந்தில் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆகி அவுட் ஆனார். பும்ரா, சஹால் ஆகியோரும் இதே பாணியில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, இந்திய அணி நெருங்கி வந்து வெற்றியை கோட்டைவிட்டது. 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. 3-0 என இந்தியாவையும் வைட் வாஷ் செய்திருக்கிறது.

இந்த தொடர் முழுவதுமே இந்தியாவிற்கு சொதப்பலாகவே அமைந்தது. மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய ராகுல் ஓப்பனராகி மிடில் ஆர்டரை கைவிட்டார். அனுபவமற்ற மிடில் ஆர்டர் அணியை கைவிட்டது. 6 வது பௌலிங்க் ஆப்சனாக பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் அரைகுறையாக பயன்படுத்தப்பட்டார்.

அதிலும் அவர் சோபிக்கவில்லை. நல்ல ஃபார்மிலிருந்த ருத்துராஜுக்கு அந்த அரைகுறை வாய்ப்பும் கிடைக்கவில்லை. முக்கியமான பௌலர்கள் இல்லாமல் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. ஆனால், முழு பந்துவீச்சு பலத்துடன் இறங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றனர். வைட் வாஷ் ஆவதற்கு முழுமையான தகுதியான பெர்ஃபார்மென்ஸையே இந்திய அணி கொடுத்திருந்தது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories