விளையாட்டு

9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய CSK: வின்னிங் ஷாட்.. தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்த தோனி!

சென்னை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய CSK: வின்னிங் ஷாட்.. தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்த தோனி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி நேற்றைய தினம் துபாயில் தொடங்கியது. அணியின் கேப்டன் தோனி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலுமே கடுமையாக சொதப்பியது சென்னை அணி. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பிரித்வி, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். 7 ரன்களில் தவான் அவுட்டான நிலையில், பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, 34 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் என 60 ரன்களை பிரித்வி எடுத்தார். பின்னர் டெல்லி அணி 10.2 ஓவரில் 80 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது டெல்லி அணி.

9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய CSK: வின்னிங் ஷாட்.. தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்த தோனி!

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில், அதிகபட்சமாக 70 ரன் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில், 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் எடுத்தார். அதேபோல் உத்தப்பா 44 பந்துகளில் 7பவுண்டரி 2 சிக்சர் என மொத்தம் 63 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக ஆட்டத்தை முடித்து வைக்க களம் இறங்கிய தோனி 6பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் என 18 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் விளையாடி சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும் தோனிக்கு சமூக வலைதளங்ளில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories