விளையாட்டு

டாஸை வென்ற தோனி...பேட்டிங் ஆடும் டெல்லி: சவால்களை சமாளித்து இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி தொடங்கியது.

டாஸை வென்ற தோனி...பேட்டிங் ஆடும் டெல்லி: சவால்களை சமாளித்து இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் தொடங்கியிருக்கிறது. சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.

சென்னை அணி ஸ்கோரை சேஸ் செய்யப்போகிறது. இது ஒரு சிறப்பான முடிவு. சென்னை அணி கடைசியாக தோற்றிருந்த 3 போட்டிகளிலுமே முதலில்தான் பேட்டிங் செய்திருந்தது. கடுமையாக சொதப்பியிருந்தது. மிடில் ஆர்டர் மொத்தமாக ஏமாற்றம் அளித்திருந்தது. தோனி எங்கே இறங்குவதென்பதில் குழப்பம் இருந்தது.

இப்போது டார்கெட்டை பொறுத்து மிடில் ஆர்டரில் மாற்றங்களை செய்து கொள்ளலாம். மேலும், இரண்டாவது பேட்டிங் செய்யும் போது கண்முன்னே ஒரு டார்கெட் இருப்பதால், தொடக்கத்திலிருந்தே ஒரு திட்டமிடலோடு பேட்டிங்கை தொடங்கலாம். இன்னொரு சாதகமான விஷயமாக துபாய் மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே அதிக போட்டிகளை வென்றிருக்கிறது.

ஒரே ஒரு வருத்தமான விஷயம். இந்த போட்டியில் ரெய்னா இல்லை. அவருக்கு பதிலாக அணியில் இருக்கும் ராபின் உத்தப்பாவும் பெரிதாக பெர்ஃபார்ம் செய்வதில்லை. பெளலிங்கை பொறுத்தவரைக்கும் இந்த இரண்டாம் பாதி சீசனில் பவர்ப்ளேயில் தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்.

டாஸை வென்ற தோனி...பேட்டிங் ஆடும் டெல்லி: சவால்களை சமாளித்து இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்?

சென்னை அணி கடைசியாக தோற்ற 3 போட்டிகளில் 1 விக்கெட்டை மட்டுமே பவர்ப்ளேயில் தீபக் சஹார் வீழ்த்தியிருக்கிறார். சென்னை அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். பவர்ப்ளே ஸ்பெசலிஸ்டான தீபக் சஹார் இந்த போட்டியில் ஃபார்முக்கு வர வேண்டும்.

சென்னை என்றாலே தவான் வெறியாட்டம் ஆடுவார். அவரை கட்டுப்படுத்தவாவது தீபக் சஹார் சிறப்பாக வீசியாக வேண்டும். மேலும், இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக ரன்களை அடித்த வீரராக பிரித்திவி ஷா இருக்கிறார். சென்னை அணி வெல்ல இருவரையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். அதற்கு தீபக் சஹார் தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

அதேநேரத்தில் டெல்லி அணியை பொறுத்தவரைக்கும் இந்த போட்டியில் ஸ்டாய்னிஸை சர்ப்ரைஸாக இறக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக டாம் கரனை இறக்கியிருக்கிறார்கள். இதனால் டெல்லி அணியும் ஒரு பேட்டர் தட்டுப்பாடுடனேயே களமிறங்குகிறது. அதனால், தவானும் பிரித்திவி ஷாவும் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயல்வார்கள்.

டாஸை வென்ற தோனி...பேட்டிங் ஆடும் டெல்லி: சவால்களை சமாளித்து இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்?

டெல்லி அணி எவ்வளவு குறைவான ஸ்கோரை எடுத்தாலுமே சென்னை அணி சேஸ் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம். ஏனெனில், இந்த ஐ.பி.எல் தொடரின் சிறப்பான பந்துவீச்சு கூட்டணியை டெல்லி வைத்திருக்கிறது. நோர்கியா, ரபாடா, ஆவேஷ்கான் வேகத்தில் மிரட்டுகிறார்கள். இளம் வீரர் ஆவேஷ் கான் விக்கெட்டை வேட்டை நடத்த, நோர்கியா 150கி.மீ வேகத்தால் பதற வைக்கிறார். ஸ்பின்னில் அஷ்வினும் அக்சரும் கலக்குகிறார்கள்.

இப்படியான பலமிக்க பந்துவீச்சை எதிர்கொண்டு ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்ய வேண்டுமெனில், சென்னை அணியின் ஓப்பனர்களான டூ ப்ளெஸ்சிஸ், ருத்ராஜ் கெய்க்வாட் இருவருமே பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தே ஆக வேண்டும். இவர்கள் தவறினால் சென்னை அணி தடுமாறவே செய்யும். சவால்களை சமாளித்து இறுதிப்போட்டிகுள் எந்த அணி நுழையப்போகிறதென்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

banner

Related Stories

Related Stories