விளையாட்டு

“ஒரே ஒரு கோல்.. 28 ஆண்டு காத்திருப்பு” : கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதித்த ‘அர்ஜென்டினா’ !

28 ஆண்டுகள் கழித்து கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினா அணி சாதனை படைத்துள்ளது.

“ஒரே ஒரு கோல்.. 28  ஆண்டு காத்திருப்பு” : கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதித்த 
‘அர்ஜென்டினா’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான 105 ஆண்டு பழமையான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் உலகப் புகழ் பெற்ற அர்ஜென்டினாவும், பிரேசில் அணியும் மோதின. இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இறுதிபோட்டி நடைபெற்றது.

போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டதால், கோல் அடிப்பது வீரர்களுக்கு சவளாக இருந்தது. விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருந்த போது 22வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலிருந்தது.

பின்னர் பிரேசில் அணி வீரர்கள் எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என தங்கள் ஆட்டைத்தை வேகப்படுத்தினர். இருந்த போதும் போட்டியின் கடைசி நிமிடம் வரை பிரேசில் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகள் கழித்து கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும், 105 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை அர்ஜெண்டினா அணி 15 முறை வெல்கிறது. இந்த வெற்றியின் மூலம் உருகுவேவின் சாதனையை அர்ஜென்டினா சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 1993ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜெண்டினா வென்றது. இதையடுத்து 28 ஆண்டுகள் கழித்து பலமான பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அர்ஜென்டினா சாதனை படைத்துள்ளது.

அர்ஜென்டினா அணிக்காக 17 ஆண்டுகளாக மெஸ்ஸி விளையாடி வருகிறார். நாட்டிற்காக ஒரு முறைகூட சர்வதேச கோப்பையை வென்றதில்லை என கடுமையான விமர்சனங்கள் மெஸ்ஸி மீது முன்வைக்கப்பட்டது. தற்போது இந்த வெற்றியின் வழி அனைத்து விமர்சனங்களுக்கும் மெஸ்ஸி பதில் சொல்லியிருக்கிறார். மேலும் இந்த தொடரில் நான்கு கோல் அடித்து, அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

சொந்த மண்ணில் தோல்வியால் பிரேசில் வீரர்கள் கடும் சோகத்தில் மூழ்கினர். நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோலும் அடிக்க முடியாத கண்ணீருடன் அரங்கிலிருந்து வெளியேறினார். சொந்த மண்ணில் பிரேசில் அணி தோற்றது ரசிகர்களை சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது.

banner

Related Stories

Related Stories